'நண்பர்களுக்காக இப்தார் விருந்து' துபாயில் உயிரிழந்த கேரள தம்பதி குறித்து வெளியான தகவல்
துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 16 பேர் பலியாகியதில் உயிரிழந்த கேரள தம்பதி, இஸ்லாமிய அண்டை வீட்டி நண்பர்களுக்காக இப்தார் விருந்து தயாரித்துக் கொண்டிருந்ததாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியர்கள்
துபாய் டெய்ரா ஃப்ரிஜ் முரார் அல் ராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். அதில், தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆண்கள் மற்றும் கேரளாவைச் சேர்ந்த கணவன்-மனைவியும் அடங்குவர்.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் அப்துல் காதர் (Imam Kasim Khader), குடு சாலியாகுண்ட் (Gudu Saliyakoondu) என அடையாளம் காணப்பட்டனர், அதேநேரம், கேரளாவைச் சேர்ந்தவர்கள் ரிஜேஷ் கலங்காடன் (Rijesh Kalangadan) மற்றும் அவரது மனைவி ஜெஷி கண்டமங்கலத் (Jeshi Kandamangalath) என அடையாளம் காணப்பட்டனர்.
madhyamam
கேரளா தம்பதி என்ன செய்துகொண்டிருந்தனர்?
பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின்போது, கேரளா தம்பதி என்ன செய்துகொண்டிருந்தனர் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ரிஜேஷும் அவரது மனைவி ஜெஷியும் தீவிபத்து நடந்த அன்று (சனிக்கிழமை) மலையாளிகள் கொண்டாடும் விஷு பண்டிகை என்பதால், அவர்கள் தங்கள் அண்டை வீட்டு இஸ்லாமிய நண்பர்களை விருந்து கொடுக்க வீட்டுக்கு அழைத்துள்ளனர்.
Image Credit: Supplied
அன்று மாலை நோன்பு துறக்கும் நேரத்தில், தங்கள் இஸ்லாமிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இப்தார் விருந்து கொடுப்பதற்காக வாழை இலையில் பரிமாறப்படும் பாரம்பரிய உணவான விஷுசத்யாவைச் செய்து கொண்டிருந்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் எண் 409-ல் ஏழு அறை தோழர்களுடன் வசித்து வந்த ரியாஸ் கைகம்பம் இதனைத் தெரிவித்தார். அவர் எண் 406-ல் வசித்த ரிஜேஷ்-ஜெஷி தம்பதியினருடன் மிகவும் நபாக பழகிவந்ததாக கூறினார். தீ முதலில் எண் 405-ல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.