ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
Indian Missions in UAE Stress Health Insurance: ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய தூதரகம் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
இந்திய தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வாழும் மற்றும் பயணம் செய்யும் இந்தியர்களுக்கு, அபுதாபி இந்திய தூதரகம் மற்றும் துபாய் இந்திய தூதரகம் இணைந்து புதிய மருத்துவ காப்பீடு தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

தூதரகங்கள் தெரிவித்ததாவது, சமீபத்தில் பல இந்தியர்கள் திடீர் நோய்கள் அல்லது மருத்துவ அவசர நிலைகள் காரணமாக சிக்கலில் சிக்கியுள்ளனர்.
இவர்களில் பலருக்கு போதுமான மருத்துவ காப்பீடு இல்லாததால், மிகப்பெரிய மருத்துவ செலவுகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பயணத்திற்கு முன்பே மருத்துவ காப்பீடு
சுற்றுலா அல்லது குறுகிய கால பயணத்திற்காக UAE-க்கு வரும் இந்தியர்கள், பயணத்திற்கு முன்பே மருத்துவ காப்பீடு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த காப்பீடு cashless facility மற்றும் மருத்துவ அவசர நிலைகளில் இந்தியாவுக்கு திரும்பும் செலவுகளையும் உள்ளடக்க வேண்டும்.
UAE-யில் வேலை விசா மூலம் வாழும் இந்தியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும், தங்களது காப்பீடு முழுமையான மருத்துவ செலவுகளையும், repatriation செலவுகளையும் காப்பதாக உறுதி செய்ய வேண்டும் என தூதரகங்கள் வலியுறுத்தியுள்ளன.
UAE-யில் தற்போது சுமார் 4.5 மில்லியன் இந்தியர்கள் வாழ்கின்றனர். இந்த அறிவிப்பு ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
மலிவு காப்பீட்டு திட்டம்
மேலும், இந்திய தூதரகம் Life Protection Plan என்ற மலிவு காப்பீட்டு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறிப்பாக blue-collar workers-க்கு உதவியாகும். இந்த திட்டம் இயற்கை அல்லது விபத்து மரணம், ஊனமுற்ற நிலை, repatriation செலவுகள் ஆகியவற்றை காப்பதாகும்.
2025-இல் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, 18 முதல் 69 வயது வரை உள்ள தொழிலாளர்களுக்கு Dh35,000 வரை காப்பீடு வழங்கப்படுகிறது. இதற்கான வருடாந்திர கட்டணம் வெறும் Dh32 மட்டுமே.
இந்த அறிவிப்பு, UAE-யில் வாழும் மற்றும் பயணம் செய்யும் இந்தியர்களுக்கு மருத்துவ பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |