அவுஸ்திரேலியா-இங்கிலாந்து போட்டியில் இந்திய தேசிய கீதம்., பாகிஸ்தான் மைதானத்தில் சலசலப்பு
அவுஸ்திரேலியா-இங்கிலாந்து போட்டி நடைபெற்ற மைதானத்தில் இந்திய தேசிய கீதம் ஒலித்ததால் பார்வையாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நான்காவது லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆட்டம் லாகூரில் நடைபெற்று வருகிறது.
கடாபி மைதானத்தில் திடீரென இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மைதான நிர்வாகம் உடனடியாக அதை சரி செய்தது.
இருப்பினும், இந்த நேரத்தில் மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் ஆச்சரியமடைந்து சத்தம் போடத் தொடங்கினர்.
நாணய சுழற்சி முடிந்த பிறகு அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்கள் தேசிய கீதங்களுக்காக மைதானத்திற்கு வந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக அவுஸ்திரேலியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட இருந்தது, ஆனால் தவறுதலாக இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
Indian national anthem in #ENGvsAUS match😂
— Vivek Vikash (@imvivekvikash) February 22, 2025
During Eng vs Aus CT2025 national anthem. They played India's national anthem.😂📷 😂#EngvsAus #ChampionsTrophy2025 #IndianAnthem pic.twitter.com/M7ozuDXK2s
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோக்களில், 'பாரத பாக்ய விதாதா' சில வினாடிகள் கேட்கிறது.
இருப்பினும், சில வினாடிகளுக்குப் பிறகு, இந்திய தேசிய கீதம் நிறுத்தப்பட்டு, அவுஸ்திரேலியாவின் தேசிய கீதம் மீண்டும் இசைக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |