கொழும்பு வந்தடைந்தது இந்திய நீர்மூழ்கிக் கப்பல்- வெளியான புகைப்படங்கள்
இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் 'வாகீர்' இலங்கை தலைநகர் கொழும்பு வந்தடைந்தது.
இந்திய உயர் ஸ்தானிகராலயம் கொழும்பில் உள்ள சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்துடன் இணைந்து, ஜூன் 21-ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு துறைமுகத்தில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வகையில், இரு நாடுகளின் கடற்படை வீரர்களின் பங்கேற்புடன் ஒரு மாபெரும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
இதன் ஒரு அங்கமாக, ‘உலகளாவிய பெருங்கடல் வளையம்’ என்ற கருப்பொருளின் கீழ் 9-வது சர்வதேச யோகா தினத்தை நினைவுகூரும் வகையில், இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் ‘வாகீர்’ திங்கள்கிழமை கொழும்பு வந்தடைந்தது.
Sri Lanka Navy
'வாகீர்' (Vagir) என்பது இந்திய கடற்படையின் சமீபத்திய உள்நாட்டு கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பல் ஆகும்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல்திங்கள் முதல் வியாழன் வரை கொழும்பில், பள்ளி குழந்தைகள் உட்பட பார்வையாளர்களுக்காக திறக்கப்படும்.
Sri Lanka Navy
இந்திய கடற்படைக் கப்பல்களான டெல்லி, சுகன்யா, கில்டன் மற்றும் சாவித்ரி இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொழும்பு மற்றும் திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்தன, இதன் போது இலங்கை கடற்படையுடன் யோகா அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
Sri Lanka Navy
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Global Ocean Ring, Indian Navy submarine Vagir, Sri Lanka Navy, International Day of Yoga, IDY 2023