500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை
கடற்கொள்ளையர்கள் மற்றும் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகளாவிய கடல் வழிகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் இந்திய கடற்படை மையப் பங்கு வகிப்பதாக ஐ.நா.வுக்கான தூதர் தெரிவித்துள்ளார்.
கடற்கொள்ளை
கடல்சார் பாதுகாப்பு குறித்த ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்பு கவுன்சில் அமர்வில் பேசிய இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், இந்திய கடற்படையின் மையப் பங்கை எடுத்துரைத்துறைத்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், மேற்கு அரபிக் கடலில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அதிகரித்து வரும் கடற்கொள்ளை சம்பவங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய கடற்படை இந்தப் பகுதியில் 35க்கும் மேற்பட்ட போர் கப்பல்களை களமிறக்கியுள்ளது,
1000க்கும் மேற்பட்ட மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, அத்துடன் 35க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு பதிலளித்துள்ளது.
கடல்சார் பாதுகாப்பு குறித்து கிரீஸ், பிலிப்பைன்ஸ், டென்மார்க், ஜப்பான், பனாமா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய கூட்டத்திலேயே இந்தியாவின் பங்கு தொடர்பில் ஹரிஷ் பேசியுள்ளார்.
மேலும், கடலோடிகளின் பாதுகாப்பு குறித்த கலந்துரையாடலின் போது, இந்திய கடற்படையின் விரைவான, அதிக ஆபத்துள்ள தலையீடுகள் எல்லைகளைத் தாண்டி நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளதையும் அவர் எடுத்துரைத்தார்.

இந்திய கடற்படையின் நம்பகமான மற்றும் விரைவான நடவடிக்கைகள், பாகுபாடின்றி 520க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தில் ஆழ்த்திய
மேலும், நவம்பர் 2023 முதல், 6.3 பில்லியன் டொலர்களுக்கு மேல் மதிப்புள்ள 14.7 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றிச் சென்றுள்ள 367க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு அளித்துள்ளது என்றார்.
செங்கடலில் ஹவுதி தாக்குதல்கள் முதல் சோமாலியா கடற்பகுதியில் மீண்டும் அதிகரித்துள்ள கடற்கொள்ளையர்கள் வரை கடலில் அதிகரித்து வரும் உறுதியற்ற தன்மை,

அத்தியாவசிய கப்பல் பாதைகள் மற்றும் ஆயிரக்கணக்கான மாலுமிகளை ஆபத்தில் ஆழ்த்திய இடையூறுகள் போன்றவற்றின் பின்னணியில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கப்பல்களில் பணியாற்றுபவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது என்றும் ஹரிஷ் பதிவு செய்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |