சிங்கப்பூரில் இந்திய செவிலியரின் துஷ்பிரயோக செயல்., பிரம்படியுடன் சிறை தண்டனை விதிப்பு
சிங்கப்பூர் வைத்தியசாலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இந்திய செவிலியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் பிரபலமான Raffles வைத்தியசாலையில் பணியாற்றிய இந்திய செவிலியர் ஒருவருக்கு, நோயாளியை பார்க்கவந்த ஆண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக ஓராண்டு மற்றும் இரண்டு மாதங்களுக்கு சிறையும், 2 பிரம்படியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.
34 வயதான எலிப் சிவ நாகு என்பவர், கிருமி நீக்கம் (disinfect) செய்வதாக கூறி, அந்த நபரை பாலியல் தொல்லை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் ஜூன் 18-ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் நடந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர் தனது தாத்தாவை சந்திக்க வைத்தியசாலைக்கு வந்துள்ளார். அவர் நோயாளிகளுக்கான கழிப்பறையில் இருந்தபோது பார்த்த செவிலியர், கையில் சோப்பை வைத்து disinfect செய்வதாக கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
அதிர்ச்சியில் உறைந்த பாதிக்கப்பட்டவர் உடனே எதிர்வினை காட்ட முடியவில்லை.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து ஜூன் 21-ஆம் திகதி புகார் செய்யப்பட்டது. அதன்பிறகு எலிப் ஜூன் 23-ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் வைத்தியசாலைகளில் பணியாற்றும் நபர்களின் நெறிமுறைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து கேள்வியை எழுப்புகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Indian nurse jailed Singapore, Singapore hospital molestation case, Elipe Siva Nagu Raffles Hospital, Indian staff nurse molestation news, Singapore court caning sentence, Raffles Hospital molestation incident, Male visitor molested Singapore, Nurse jailed for sexual assault Singapore, Singapore crime news October 2025, Indian national jailed abroad