விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் - யார் இந்த அர்விந்தர் சிங் பஹால்?
இந்திய வம்சாவளி தொழிலதிபரான அர்விந்தர் சிங் பஹால் இன்று விண்வெளிக்கு சுற்றுலா செல்கிறார்.
ப்ளூ ஆர்ஜின் விண்வெளி சுற்றுலா
ஆராய்ச்சிகளுக்காக மனிதர்கள் விண்வெளிக்கு சென்று வந்த நிலையில், தற்போது சுற்றுலாவிற்காகவும் விண்வெளிக்கு சென்று வருகின்றனர்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாசுக்கு சொந்தமான ப்ளூ ஆர்ஜின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், நியூ செப்பர்டு என்ற திட்டத்தின் கீழ் மனிதர்களை விண்வெளி சுற்றுலா அழைத்துச் சென்று வருகிறது. இதுவரை, 70 பேரை ப்ளூ ஆர்ஜின் விண்வெளிக்கு அழைத்து சென்று வந்துள்ளது.
ஆனால், இவர்கள் சுனிதா வில்லியம்ஸ், சுபான்ஷு சுக்லா போன்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லவில்லை. விண்வெளியின் எல்லை என கருதப்படும் கார்மன் கோட்டிற்கு வரை சென்று சில நிமிடங்களில் திரும்பி வர உள்ளனர்.
Welcome to Astronaut Village, NS-34 Crew! pic.twitter.com/XxOhuCpbLJ
— Blue Origin (@blueorigin) August 1, 2025
NS-34 என்ற விமானம் மூலம், 6 பேர் கொண்ட குழு மேற்கு டெக்சாஸ் ஏவுதளத்திலிருந்து உள்ளூர் நேரப்படி காலை 7:30 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 6:00 மணி) புறப்பட உள்ளனர்.
அர்விந்தர் சிங் பஹால்
இந்த குழுவில் இந்திய வம்சாவளி தொழிலதிபரான அர்விந்தர் சிங் பஹாலும் செல்கிறார்.
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பிறந்த அவர், அமெரிக்காவில் குடியுரிமை பெற்று 1975 ஆம் ஆண்டு முதல் அங்கு ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
80 வயதான சாகச ஆர்வலரான அவர், உலகின் உள்ள அனைத்து நாடுகளுக்கும் செல்லும் திட்டத்தை வைத்துள்ளார். மேலும், வட மற்றும் தென் துருவ முனைகளுக்கு செல்வது, எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்வது போன்ற திட்டங்களை வைத்துள்ளார். மேலும் ஹெலிகாப்டர் இயக்குவதற்கான விமானி லைசென்ஸும் வைத்துள்ளார்.
இவருடன், துருக்கிய தொழிலதிபர் கோகன் எர்டெம், புவேர்ட்டோ ரிக்கன் வானிலை ஆய்வாளர் டெபோரா மார்டோரெல், ஸ்பெயினில் வசிக்கும் கொடையாளர் லியோனல் பிட்ச்ஃபோர்ட், முதலீட்டாளர் ஜே.டி. ரஸ்ஸல் ஆகியோர் செல்ல உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |