பயங்கரவாத அமைப்பிற்கு நிதியுதவி செய்ததாக இந்திய வம்சாவளி முதியவர் கைது
அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பிற்கு நிதி உதவி செய்ததாக, சந்தேகத்தின் பேரில் இந்திய வம்சாவளி முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத அமைப்பிற்கு நிதியுதவி
இந்திய வம்சாவளியான (sundar nagarajan)சுந்தர் நாகராஜன்(66) என்பவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர் ஆவர். இவர் ஹிஸ்புல்லாஹ் என்ற பயங்கரவாத அமைப்பிற்கு நிதியுதவி செய்ததாக சந்தேகத்தின் பேரில் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிஸ்புல்லாஹ்(Hizbollah) என்ற இயக்கம் அமெரிக்காவில் தடைசெய்யபட்ட தீவிரவாத இயக்கமாகும்.
@gettyimages
" சுந்தர் நாகராஜன் இன்று மதியம் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பாக, ஒப்படைப்பு நடவடிக்கைகளை தொடங்குவதற்காக பொலிஸார் காவலில் வைக்கப்பட்டுள்ளார்" என்று பெருநகர காவல்துறையின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு நாடு கடத்தல்
அமெரிக்க அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, தேசிய ஒப்படைப்பு பிரிவின் அதிகாரிகள், சர்வதேச கைது வாரண்டின் அடிப்படையில் மேற்கு லண்டனிலிருந்து நாகராஜனை கைது செய்துள்ளனர்.
@gettyimages
காசி விஸ்வநாதன் நாகா மற்றும் நாகராஜன் சுந்தர் பூங்குளம் என அழைக்கப்படும் சுந்தர் நாகராஜன், தற்போது அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படவுள்ளார். அவர் அமெரிக்க தடைகளை மீறிய குற்றத்திற்காகவும், ஹிஸ்புல்லாவுக்கு நிதியளிக்கவும் கருப்பு பணத்தை மாற்ற உதவிய குற்றச்சாட்டையும் எதிர்கொள்வார் என தெரிய வந்துள்ளது.
சர்வதேச கணக்காளர்
பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை இலக்காகக் கொண்ட பிரித்தானிய மற்றும் அமெரிக்காவின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, Met's Counter Terrorism Command அதிகாரிகள், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக சந்தேகத்தின் பேரில் நஷீம் அகமது என்பவரையும் கைது செய்துள்ளனர்.
@afp
அமெரிக்காவின் கூற்றுப்படி, லெபனான் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா, பயங்கரவாதக் குழுவிற்கு கணிசமான அளவு கருப்பு பணத்தை மாற்ற, நஷீம் அகமது மற்றும் அவரது நிறுவனங்களைப் பயன்படுத்துகிறது, நாகராஜன் அதற்கு சர்வதேச கணக்காளராக இருந்துள்ளார்.
இந்தநிலையில் நாகராஜன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இன்னும் சில தினங்களில் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்கான தண்டனை அறிவிக்கப்படும் என தெரியவந்துள்ளது.