பிரித்தானியாவில் விமான விபத்தில் பலியான இந்திய வம்சாவளி தம்பதியர்
Indian origin husband and wife who died in plane crash pictured: விமான விபத்தில் உயிரிழந்த இந்திய வம்சாவளி தம்பதியரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஒரு இந்திய வம்சாவளி தம்பதியர் இங்கிலாந்திலிருந்து வேல்ஸ் நாட்டுக்கு பயணிக்கும்போது அவர்களுடைய விமானம் மாயமானது.
அந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் சில வெளியாகியுள்ளன.
இந்திய வம்சாவளி தம்பதியர்
இங்கிலாந்திலுள்ள Syston என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த கேத்தன் ஸ்வாலி (59) மற்றும் ஷீத்தல் ஸ்வாலி (55) தம்பதியர், கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, ஆகத்து மாதம் 14ஆம் திகதி, Tatenhill விமான நிலையத்திலிருந்து வேல்ஸ் நாட்டிலுள்ள Caernarfon விமான நிலையத்துக்கு சிறிய ரக விமானம் ஒன்றில் புறப்பட்டுள்ளனர்.

ஆனால், அவர்கள் Caernarfon விமான நிலையம் வந்தடையாததால், அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்களுடைய விமானம், வேல்ஸ் நாட்டிலுள்ள Gwynedd என்னுமிடத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கிக் கிடந்தது தெரியவந்தது.
சம்பவ இடத்தை அவசர் உதவிக்குழுவினர் அடைந்த நிலையில், கேத்தன், ஷீத்தல் தம்பதியர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
தம்பதியரின் மரணம் அவர்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ள நிலையில், அவர்களுக்கு இரங்கல் செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |