அமெரிக்காவில் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பம்: நீண்டநாள் பகை., சந்தேக நபர் கைது
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய வம்சாவளி குடுபத்தை கொலை செய்யப்பட வழக்கில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபருக்கு குடும்பத்துடன் ஒரு வருடத்திற்கும் மேலான பகை இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கலிபோர்னியாவில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் கொண்ட இந்திய வம்சாவளி குடும்பத்தை துப்பாக்கி முனையில் கடத்தி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தை உட்பட குடும்பத்தினர் இரண்டு நாட்கள் கழித்து தோட்டத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
குடும்பத்தினரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் பதிவான காட்சிகள் மூலம் சந்தேக நபர்களை அடையாளம் கண்டதையடுத்து, முக்கிய குற்றவாளி என கருதப்படும் Jesus Manuel Salgado என்பவரை பொலிஸார் கைது செய்தனர்.
தொடர்புடைய முந்தைய செய்தி: அமெரிக்காவில் கடத்தி கொல்லப்பட்ட இந்திய குடும்பம்: பரபரப்பான சிசிடிவி ஆதாரக் காட்சியுடன் வெளியாகியுள்ள தகவல்கள்
விசாரணையில் அவர் குடும்பத்தினரின் தொழிலில் வேலை செய்த முன்னாள் ஊழியர் என்பதும், அவருக்கும் குடும்பத்திற்கும் நீண்டகால தகராறு இருந்ததும் தெரியவந்தது.
48 வயதான ஜீசஸ் சல்காடோ, ஒரு வருடத்திற்கு முன்பு தங்கள் டிரக்கிங் தொழிலில் பணிபுரிந்த பிறகு கோபமான குறுஞ்செய்திகள் அல்லது மின்னஞ்சல்களை அனுப்பியதாக கொலைசெய்யப்பட்ட குடும்பத்தின் உறவினர்கள் புலனாய்வாளர்களிடம் தெரிவித்தனர், என்று மெர்சிட் கவுண்டி ஷெரிஃப் வெர்ன் வார்ன்கே கூறினார்.
சல்காடோ திங்களன்று மெர்சிடில் துப்பாக்கி முனையில் 8 மாத குழந்தை, அவளுடைய பெற்றோர் மற்றும் அவளது மாமாவை கடத்திச் சென்று அவர்களைக் கொன்றுவிட்டு, அவர்களின் உடல்களை ஒரு பாதாம் தோட்டத்தில் விட்டுச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Merced County sheriff office
மெர்சிடில் இருந்து தெற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோஸ் பாலோஸ் நகருக்கு அருகில் உள்ள தொலைதூரப் பகுதியில் புதன்கிழமை பிற்பகுதியில் ஒரு பண்ணை தொழிலாளியால் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சல்காடோவின் கூட்டாளியாக செயல்பட்ட மற்றோரு சந்தேக நபரையும் புலனாய்வாளர்கள் தேடி வருகின்றனர் என்று ஷெரிப் கூறினார்.