ஒன்லைன் காதலரை நம்பி 450,000 டொலர்களை இழந்த இந்திய வம்சாவளி இளம்பெண்...
பிரான்ஸ் நாட்டவர் என தன்னை அறிமுகம் செய்துகொண்டு இணையம் வாயிலாக பழகிவந்த ஒருவரிடம் 450,000 டொலர்களை இழந்துள்ளார் இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர்.
இணைய காதல்
டேட்டிங் தளம் ஒன்றில் Ancel என்னும் பிரெஞ்சு நாட்டவரை சந்தித்தார் இந்திய வம்சாவளியினரான ஷ்ரேயா தத்தா (37). (புகைப்படங்களில்) பார்ப்பதற்கு கம்பீரமாகவும், பழகுவதற்கு இனிமையாகவும் இருந்த Ancelம் ஷ்ரேயாவும் பல மாதங்களாக உருகி உருகிக் காதலித்தார்கள்.
வாட்ஸ் ஆப்பில் முத்த இமோஜிகளும், காதலர் தினத்தின் பூங்கொத்துக்களுமாக அள்ளி வழங்கிய Ancelஐ நேரில் சந்திக்க விரும்பினார் ஷ்ரேயா. ஆனால், நேரில் சந்திக்கும் திட்டம் தள்ளிக்கொண்டே போனது.
வேலையைக் காட்டிய காதலர்
ஒரு நாள், சீக்கிரமாக பணி ஓய்வு பெறுவது தன் திட்டம் எனக் கூறிய Ancel, உனது திட்டம் என்ன? என ஷ்ரேயாவைக் கேட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த ஷ்ரேயாவுக்கும், சீக்கிரம் ஓய்வு பெறும் எண்ணம் தொற்றிக்கொண்டுள்ளது. தன் வேலை சீக்கிரமாக முடியப்போவதை உணர்ந்த Ancel, தான் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துதான் இவ்வளவு பணம் சம்பாதித்ததாகக் கூறி, உண்மையானது போலவே தோன்றிய ஒரு ஆப்பை ஷ்ரேயாவுக்கு அறிமுகம் செய்துள்ளார்.
அதை உண்மை என்று நம்பி, கொஞ்சம் கொஞ்சமாக பணம் முதலீடு செய்யத் துவங்கிய ஷ்ரேயா, 450,000 டொலர்கள் முதலீடு செய்துள்ளார்.
உருவான சந்தேகம்
பின்னர், தான் முதலீடு செய்த பணத்திலிருந்து ஒரு சிறிய தொகையை எடுக்க முயலும்போது, அதற்கு வரி செலுத்தவேண்டும் என செய்தி வரவே, ஷ்ரேயாவுக்கு சந்தேகம் ஏற்பட, லண்டனில் வாழும் தன் சகோதரரிடம் இது குறித்துக் கேட்க, அவர் அது குறித்து விசாரித்துள்ளார்.
அப்போதுதான் தெரிந்தது, Ancel என்பவர் உண்மையாவவர் அல்ல, அவர் தன்னுடைய புகைப்படம் என்று கூறியது, ஜேர்மன் பிட்னஸ் இன்ப்ளூயன்சர் ஒருவரது புகைப்படத்தைபோல உருவாக்கப்பட்ட AI deepfake புகைப்படம் என்பது.
காதல், காதலர் என நம்பி, தனது மொத்த சேமிப்பையும் இழந்து, சாப்பிடவோ தூங்கவோ முடியாமல் மன அழுத்தத்துக்குள்ளாகியுள்ளார் ஷ்ரேயா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |