அமெரிக்காவில் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி கூகுள் அதிகாரி: கணவனை கைது செய்த பொலிஸார்
அமெரிக்காவில் வசித்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த கூகுள் அதிகாரி குடும்ப வன்முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி கூகுள் அதிகாரி
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் கோப் கவுண்டியில் உள்ள தன்னுடைய வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் கூகுள் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப அதிகாரியான 57 வயது ஷீத்தல் வர்சீயன்(Sheetal Wrzesien) குடும்ப வன்முறையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், காயங்களுடன் வீட்டின் வாசலில் காணப்பட்ட அவரது 23 வயது மகன் ஜேசன் வர்சீயன்(Jason Wrzesien) காவல்துறையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த வன்முறை சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய நபராக கருதப்படும் ஷீத்தல் வர்சீயனின் கணவரான 56 வயது கிரிக் பி. வர்சீயன்(Kirk B. Wrzesien) பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கோப் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கிரிக் பி. வர்சீயன் மீது ஒரு கொலைக் குற்றச்சாட்டு, இரண்டு கடுமையான தாக்குதல் குற்றச்சாட்டுகள் மற்றும் தாக்குதலின் போது துப்பாக்கி வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
இது தனிப்பட்ட குடும்ப வன்முறை என்றும், பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஷீத்தல் வர்சீயன் ஆளுமை

20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்ட ஷீத்தல் வர்சீயன். கூகுள் நிறுவனத்தின் பொறியியல் தலைவராக பணியாற்றி வந்தார். அவர் மின் வணிகம் மற்றும் நிறுவன மாற்றம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் நிறுவனத்தில் பணிபுரிவதற்கு முன்பு, ஹோம் டெப்போ நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |