கெய்ர் ஸ்டார்மரின் இடத்துக்கு போட்டி போடும் இந்திய வம்சாவளியினர்
Indian origin person in race to succeed Keir Starmer: கெய்ர் ஸ்டார்மரின் நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கைக்கான போட்டியில் இந்திய வம்சாவளியினர் ஒருவரும் இணைந்துகொண்டுள்ளார்.
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான சர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்தது அனைவரும் அறிந்ததே.
அதுமட்டுமின்றி, அவர் சமீபத்தில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
கெய்ர் ஸ்டார்மரின் இடத்தைப் பிடிக்க...
கெய்ர் ஸ்டார்மர், இங்கிலாந்திலுள்ள Holborn and St Pancras தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

அவர் தனது நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதி காலியாக உள்ளது.
இந்நிலையில், அந்தத் தொகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் கிரீன் கட்சித் தலைவரான ஸாக் போலன்ஸ்கி.
அவருடன், தற்போது இந்திய வம்சாவளியினரான ரிஷி மத்லானி (44) என்னும் நபரும் போட்டியில் இணைந்துள்ளார்.

வங்கியாளரும், லேபர் கட்சி உறுப்பினரும், கவுன்சிலராக பணியாற்றிவருபவருமான ரிஷி, Holborn and St Pancras தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகும் முயற்சிகளை துவக்கியுள்ளார்.
25 ஆண்டுகளாக தான் Holborn and St Pancras தொகுதியில் வாழ்ந்துவருவதாக தெரிவிக்கும் ரிஷி, அங்கேதான் எனது அரசியலும், சமூக சேவையும் துவங்கின என்கிறார்.
அவருக்கு லேபர் இண்டியன்ஸ் என்னும் அமைப்பு மற்றும் லேபர் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் இண்டியா என்னும் அமைப்பின் ஆதரவும் உள்ளன.
என்றாலும், நான் இந்த தொகுதிக்காகவும், லேபர் கட்சிக்காகவும் எதையாவது செய்யவேண்டும் என்பதற்காகவே களத்தில் இறங்க உள்ளேன் என்று கூரும் ரிஷி, மலிவு விலை மற்றும் சமூக வீட்டு வசதிக்காகவும், பருவநிலை மாற்றத்தின் மீது வலுவான நடவடிக்கைக்காகவும், உழைக்கும் மக்களுக்குப் பலனளிக்கும் ஒரு பொருளாதாரத்திற்காகவும், அனைவரும் செழித்தோங்க வாய்ப்புள்ள ஒரு தொகுதிக்காகவும் நான் போராட விரும்புகிறேன். கடந்த 25 ஆண்டுகளாக இங்கு நான் பெற்ற அனுபவத்தை நாடாளுமன்றத்தில் செயல்படுத்த விரும்புகிறேன் என்கிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |