அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி பெண் கொல்லப்பட்ட வழக்கு: சமீபத்திய தகவல்
அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் கொல்லப்பட்ட வழக்கில், அவரது கணவர் தன் மனைவியின் மரணத்துக்கு தான்தான் காரணம் என ஒப்புக்கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி பெண்

கடந்த மாதம், அதாவது, 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி, அவுஸ்திரேலியாவின் Adelaide நகரில் புறநகர்ப்பகுதியில் வாழ்ந்துவந்த சுப்ரியா (36) என்னும் இந்திய வம்சாவளியினரான பெண் சுயநினைவற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவரைக் காப்பாற்ற மருத்துவ உதவிக்குழுவினர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் சுப்ரியா உயிரிழந்துவிட்டார்.
சுப்ரியாவின் மரணம் தொடர்பில் அவரது கணவரான விக்ராந்த் தாக்கூர் (42) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கக்கூட இல்லை.
இந்நிலையில், தனது மனைவியின் மரணத்துக்குக் தான்தான் காரணம் என தற்போது ஒப்புக்கொண்டுள்ளார் தாக்கூர். என்றாலும், தான் அவரைக் கொலை செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட நபர்களின் DNA ஆய்வு முடிவுகளும், சுப்ரியாவின் உடற்கூறு ஆய்வு முடிவுகளும் வரவேண்டியுள்ளதால் வழக்கை 16 வாரங்கள் தள்ளிவைக்க அரசு சட்டத்தரணிகள் கேட்டுக்கொண்டதையடுத்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதம் நடத்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இதற்கிடையில், சுப்ரியாவின் மகனான சிறுபையன், தனது தாயை இழந்து அநாதரவாக விடப்பட்டுள்ளது கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |