கனடாவில் பணியில் இருந்த இந்திய வம்சாவளி பொலிஸார் உயிரிழப்பு: 18 வயது இளைஞர் கைது
கனடாவில் பணியில் இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கனடாவில் இந்திய வம்சாவளி பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு
கனடாவில் ஹர்ஸ்ட்(Hearst) நகருக்கு அருகே நடந்த வாகன விபத்தில் பணியில் இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பொலிஸ் அதிகாரி தருண் பாலி உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்ராறியோ மாகாண காவல்துறை அதிகாரியான 29 வயது தருண் பாலி விசாரணை ஒன்றில் ஈடுபட்டிருந்த போது வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தப்பியோடிய 18 வயது இளைஞர்
மனநலச் சட்டத்தின் கீழ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த 18 வயது இளைஞர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவத்தில் அவரை பிடிக்கும். பணியில் பொலிஸ் அதிகாரி தருண் பாலி ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த 18 வயது இளைஞர் ஓட்டி வந்த கார் மோதியதில் பொலிஸ் அதிகாரி தருண் பாலி பலத்த காயமடைந்தார்.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இதற்கிடையில் சம்பந்தப்பட்ட இளைஞரை அங்கிருந்த மற்ற காவல்துறை அதிகாரிகள் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அந்த இளைஞர் மீது முதல் நிலை கொலை, பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்றதாக 2 குற்றச்சாட்டுகள், அபாயகரமாக வாகனம் ஓட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |