அமெரிக்க ஜனாதிபதியை கொல்ல முயன்ற இந்திய வம்சாவளி இளைஞர்! கூறிய அதிர்ச்சி காரணம்
அமெரிக்க வெள்ளை மாளிகையின் வாயிலில் டிரக்கை கொண்டு மோதியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
டிரக் கொண்டு மோதிய இளைஞர்
வெள்ளை மாளிகையின் தடுப்புச்சுவரின் மீது U-Haul டிரக் ஒன்று மோதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து வாகனத்தை இயக்கிய சாரதி கைது செய்யப்பட்டார். இதன் விளைவாக சாலை மற்றும் நடைபாதை மூடப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதி ஜோ பைடனை கொல்லும் முயற்சி என அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில், வாகனத்தை இயக்கிய நபர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாய் வர்ஷித் கந்துலா (19) என்ற இளைஞர் என்று தெரிய வந்துள்ளது.
இவர் ஆந்திரா அல்லது தெலங்கானாவைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. அவர் வாடகைக்கு டிரக்கை எடுத்துக் கொண்டு வந்து மோதியுள்ளார். இதற்காக அவர் ஆறு மாதங்களாக திட்டமிட்டு வருவதாக தெரிய வந்தது.
இந்திய வம்சாவளி இளைஞர்
அதிகாரிகளிடம் அவர் கூறிய விடயம் அதிர்ச்சி அளித்தது. குறித்த இளைஞர், 'வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து அதிகாரத்தைக் கைப்பற்றி, தேசத்தின் பொறுப்பில் அமர்த்தப்படுவதே எனது குறிக்கோள். அதனை செய்ய வேண்டியிருந்தால் ஜனாதிபதியை கொன்றுவிடுவேன், என் வழியில் நிற்கும் எவரையும் காயப்படுத்துவேன்' என தெரிவித்துள்ளார்.
கந்தலாவிடம் நாசி கொடி ஒன்று கைப்பற்றப்பட்டது. நாசிகளுக்கு ஒரு சிறந்த வரலாறு உள்ளது என்பதால், அதனை அவர் ஒன்லைனில் வாங்கியதாகவும், ஹிட்லரை வலுவான தலைவராக பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
AP file
பின்னர் வாஷிங்டன் DC உயர் நீதிமன்றத்தில் அவர் நிலைநிறுத்தப்பட்டார். மேலும் பெடரல் நீதிமன்றத்தில் அவர் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் மீது ஆபத்தான ஆயுதத்தால் தாக்கியமை மற்றும் மோட்டார் வாகனத்தை பொறுப்பற்ற முறையில் இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.