ஜோ பைடனை கொன்றுவிடுவதாக மிரட்டிய நபர்! வெள்ளை மாளிகையின் வாயிலில் லொறியை மோதியதால் பரபரப்பு
அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு தடைகள் மீது சந்தேக நபர் லொறியை மோதியதால், ஜனாதிபதி ஜோ பைடனை கொல்ல முயற்சித்தாக கைது செய்யப்பட்டார்.
வெள்ளை மாளிகை
நேற்றிரவு 10 மணியளவில் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு தடைகள் மீது, நபர் ஒருவர் லொறியைக் கொண்டு மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
U-Haul டிரக்கை கொண்டு அவர் மோதிய நிலையில், அதற்குள் நாசிக் கொடி ஒன்றை பொலிஸார் கைப்பற்றினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் மீது ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதி அல்லது குடும்ப உறுப்பினரைக் கொல்ல, கடத்த அல்லது தீங்கு விளைவிக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது.
தற்காலிக மூடல்
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, Lafayette சதுக்கத்தைச் சுற்றியுள்ள சில சாலைகள் மற்றும் நடைபாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
Reuters
ஜனாதிபதி பைடன் சம்பவத்தின்போது வெள்ளை மாளிகையில் இருந்தார் என்றும், மாளிகை மிகவும் பாதுகாக்கப்பட்ட இடம் என்பதால் நபர்கள் ஊடுருவ முடியாது என்றும் கூறப்படுகிறது.