IPL 2025 தொடக்கம் - Google சிறப்பு டூடுல் வெளியீடு!
இந்தியாவின் பிரபலமான இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2025) தொடங்கியதை முன்னிட்டு Google ஒரு சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
இந்த டூடுலில் இரண்டு வாத்துகள் கிரிக்கெட் ஆடுகின்ற காட்சியை காணலாம்.
இந்த சீசனில், முதல் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் இடையே நடக்கிறது.
இது 2008-ல் நடந்த முதல் IPL போட்டியில் இதே இரண்டு அணிகள் விளையாடியது, இப்போது மீண்டும் இரு அணிகளும் முதல் போட்டியில் எதிர்கொள்வதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
பிரெண்டன் மெக்கல்லம் தனது தொடக்க போட்டியில் அடித்த 158 ரன்கள் IPL வரலாற்றில் மைல்கல்லாக உள்ளது. தற்போது, விராட் கோஹ்லி இருக்கும் நிலையில், அவரது ஆட்டத்திற்கும் ஏதன் கார்டன்ஸ் மைதானத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளன.
மேலும், KKR இணை உரிமையாளர் ஷாரூக் கான், பாடகி ஷ்ரேயா கோஷால், கரண் ஆஜ்லா மற்றும் நடிகை திஷா பட்னி ஆகியோர் பங்கேற்கும் சிறப்பான தொடக்க விழாவும் நடைபெற உள்ளது.
Google பாரிய நிகழ்வுகளுக்கு தனிப்பட்ட டூடுல்களை உருவாக்கும். IPL உலகளவில் மிகப்பாரிய T20 லீக் என்பதால், இது Google லோகோவில் சிறப்பு இடம் பிடித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |