சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கொடி ஏற்றாத இரண்டு முக்கியமான இந்திய பிரதமர்கள்
இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், இரண்டு முக்கியமான இந்திய பிரதமர்களுக்கு சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கொடி ஏற்றும் வாய்ப்பு அமையாமல் போயுள்ளது.
இரண்டு பிரதமர்கள்
பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 11வது ஆண்டாக வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து மூவர்ணக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.
ஆனால், செங்கோட்டையில் இருந்து தேசியக் கொடியை ஏற்றும் பெருமையை ஒருபோதும் பெறாத இரண்டு முக்கிய பிரதமர்கள் குல்சாரிலால் நந்தா மற்றும் சந்திரசேகர்.
குல்சாரிலால் நந்தா இரண்டு தனித்தனி சந்தர்ப்பங்களில் இந்தியாவின் தற்காலிக பிரதமராக பணியாற்றியுள்ளார். நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு மே 27, 1964 அன்று முதன்முதலில் தற்காலிக பிரதமரானார்.
அதன் பின்னர் லால் பகதூர் சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு ஜனவரி 11, 1966 அன்று மீண்டும் அவர் தற்காலிக பிரதமரானார். குல்சாரிலால் நந்தாவின் இரண்டு பதவிக்காலங்களும் தலா 13 நாட்கள் மட்டுமே நீடித்தன.
இதனாலையே சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. 1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நாடு அரசியல் ஸ்திரமின்மையைச் சந்தித்து வந்த கொந்தளிப்பான நேரத்தில், சந்திரசேகர் இந்தியாவின் 8வது பிரதமரானார்.
தொடரும் பாரம்பரியம்
ஆனால் சந்திரசேகரின் பதவிக்காலம் நவம்பர் 10, 1990 முதல் ஜூன் 21, 1991 வரை வெறும் 6 மாதங்களுக்கும் மேலாக மட்டுமே நீடித்தது. காங்கிரசுடனான அவரது கூட்டணி அரசாங்கம் கருத்து வேறுபாடு காரணமாக வீழ்ந்தது, புதிய தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன.
சந்திரசேகரின் பதவிக் காலம் ஆகஸ்டு மாத்திற்கு முன்னரே முடிவுக்கு வந்ததால், செங்கோட்டையில் இந்தியக் கொடியை ஏற்றும் பாக்கியமும் அவருக்குக் கிடைக்கவில்லை.
இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு, புதிதாக உருவாக்கப்பட்ட தேசத்திற்குச் சின்னமான செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து இந்தியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றி, இன்றுவரை தொடரும் ஒரு பாரம்பரியத்தைத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |