திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய பெண்: காப்பாற்றிய இந்தியருக்கு குவியும் பாராட்டுகள்
சிங்கப்பூரில் திடீரென சாலையில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் சிக்கிய பெண்ணைக் காப்பாற்றிய இந்திய புலம்பெயர்ந்தோருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய பெண்
சனிக்கிழமை மாலை, சிங்கப்பூரிலுள்ள Tanjong Katong சாலையில் திடீரென பெரும் சத்தத்துடன் ஒரு பள்ளம் உருவாகியுள்ளது.
பள்ளத்தில் தண்ணீர் நிரம்பியிருக்க, அவ்வழியாக சென்றுகொண்டிருந்த ஒரு கார் அந்தப் பள்ளத்திற்குள் விழுந்துள்ளது.
நடந்ததை கவனித்த சுப்பையா ( Pitchai Udaiyappan Subbiah, 46) என்னும் புலம்பெயர்ந்த இந்தியர், உடனடியாக அங்கு ஓடோடிச் சென்றுள்ளார்.
கட்டுமானப் பணியை மேற்பார்வை செய்துகொண்டிருந்த சுப்பையா, உடனடியாக தன்னுடன் வேலை செய்த மூன்று பணியாளர்களை அழைத்து கயிறொன்றை அந்தப் பள்ளத்துக்குள் இறக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
பள்ளத்துக்குள் விழுந்த காரிலிருந்த பெண், கதவைத் திறந்து அந்தக் கயிற்றைப் பிடித்துக்கொள்ள, சுப்பையா கூறியபடி அந்த பணியாளர்கள் அந்தப் பெண்ணை பள்ளத்திலிருந்து வெளியே தூக்கி எடுத்துள்ளார்கள்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். விரைந்து, சமயோகிதமாக செயல்பட்டு அந்தப் பெண்ணைக் காப்பாற்றிய சுப்பையாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |