தொடரும் இனவெறுப்பு தாக்குதல்கள்: அயர்லாந்தில் வாழும் இந்தியரின் முடிவு
அயர்லாந்தில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் நிலையில், தலைநகர் டப்ளினில் வாழும் இந்தியர் ஒருவர் தான் இந்தியாவுக்கே திரும்ப முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வீட்டை விட்டு வெளியே செல்லவே பயமாக உள்ளது
ஞாயிற்றுக்கிழமையன்று பூங்கா ஒன்றிலிருந்து விடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார் அந்த இந்தியர்.
அப்போது, மின்சார ஸ்கூட்டர் ஒன்றில் வந்த ஒரு அயர்லாந்து நாட்டவரான இளைஞர் ஒருவர் இந்த இந்தியரை வயிற்றில் எட்டி உதைத்துள்ளார்.
அங்கிருந்து அவர் விலகிச் செல்ல முயன்ற நிலையில், மேலும் இரண்டு பேர் சேர்ந்துகொண்டு அவரைத் தாக்கத் துவங்கியுள்ளார்கள்.
ஒருவர் உலோக தண்ணீர் போத்தல் ஒன்றினால் அவரது முகத்தில் தாக்க, அவரது கண்ணுக்கு மேலே ஆழமாக வெட்டுப்பட்டு இரத்தம் கொட்டத் துவங்கியுள்ளது.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு கண்ணுக்கு மேலே தையல் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது நண்பர்கள் பலரும் தங்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லவே பயமாக உள்ளது என கூறுவதாக தெரிவிக்கும் அவர், இந்தியாவிலிருக்கும் தன் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து அறிந்து கவலையில் ஆழ்ந்துள்ளதாகவும், இந்தியா திரும்புமாறு தன்னை வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்படி தான் இந்தியா திரும்ப தயாராகிவருவதாகவும், தன் நண்பர்கள் பலரும் இந்தியா திரும்ப திட்டமிட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், வரும் ஞாயிற்றுக்கிழமை அயர்லாந்து தலைநகர் டப்ளினில் வருடாந்திர ‘இந்திய தினம்’ கொண்டாடப்பட இருந்த நிலையில், அயர்லாந்து இந்தியா கவுன்சில், பாதுகாப்பு கருதி அந்த நிகழ்ச்சியை தள்ளிவைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |