அண்டார்டிகா பனியில் செதுக்கப்பட்ட விநாயகர்: இந்தியா ஆராய்ச்சியாளர்களின் கொண்டாட்டம்
Indian Scientists Made Ganesh with Antarctica Ice: பனி உறைந்த அண்டார்டிகாவில் இந்திய அறிவியலாளர்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்ந்து உள்ளனர்.
அண்டார்டிகாவில் விநாயகர் சதுர்த்தி
இந்தியாவின் மைத்ரி(Maitri) ஆராய்ச்சி மையத்தில்(NCPOR) ஆராய்ச்சியாளர்களாக பணியாற்றி வரும் அரவிந்த் ஹோசல்கர் மற்றும் கார்த்திக் பி. இருவரும் சுற்றிலும் பனி சூழ்ந்த அண்டார்டிகாவில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியுள்ளனர்.
வழிபாட்டுக்கு தேவையான வழக்கமான பொருட்கள் கிடைக்காததை அடுத்து, தங்களை சுற்றி இருந்த பனியை அழகாக செதுக்கி விநாயகர் சிலை ஒன்றை செய்துள்ளனர்.
In a first-of-its-kind celebration, devotees 15,000 km from home have crafted a handmade Ganesh idol entirely out of Antarctic snow. 👀🥰
— Sumita Shrivastava (@Sumita327) September 23, 2026
No plaster, no chemicals, no pollution - just pure ice that will melt back into nature…
This is eco-friendly immersion taken to the extreme.… pic.twitter.com/ttmUEt0iDo
அந்த ஆராய்ச்சி மையத்தில் மருத்துவராக பணியாற்றி வரும் அனிருத் தார் என்பவர் இந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் சில காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், ஆராய்ச்சிக் குழுவினர் அனைவரும் ஒன்றாக விநாயகருக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்ததை பார்க்க முடிந்தது.

மேலும் அந்த வீடியோவில், இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட 15,000 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதை குறிப்பிட்டு அதன் கீழே, நாங்கள் கைகளால் செய்த இந்த பனி விநாயகர் தான் உலகத்திலேயே சுற்றுச்சூழலுக்கு ஏற்ற விநாயகராக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.