வெளிநாடொன்றில் இந்தியரின் காரை வழிமறித்து துப்பாக்கியால் சுட்ட கொள்ளையர்கள்
An Indian national was shot and injured after a group of armed robbers ambushed his vehicle in Peru: பெரு நாட்டில், இந்தியர் ஒருவர் பயணித்த கார் ஒன்றை வழிமறித்த கொள்ளையர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டதில் அவர் காயமடைந்துள்ளார்.
இன்று காலை 6.30 மணியளவில், இந்தியரான விஜய் பக்ரானி இசா (Vijay Pagrani Iza, 29) என்பவரும், மாரி நட்டாலி மிராண்டா எஸ்பினோசா (Mari Nataly Miranda Espinoza, 35) என்னும் பெரு நாட்டுப் பெண்ணும், பெரு நாட்டின் தலைநகரான லிமா நகரில் காரில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

துப்பாக்கியால் சுட்ட கொள்ளையர்கள்
அப்போது, அவர்களுடைய காரை மற்றொரு கார் வழிமறித்துள்ளது. அந்தக் காரிலிருந்து இறங்கிய நபர்கள் விஜயின் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள்.
VICTIMS IDENTIFIED in Peru HIGHWAY AMBUSH where robbers EMPTIED THEIR MAGAZINES onto SUV in GTA-STYLE HEIST INDIAN NATIONAL Vijay Pagrani Iza & PERUVIAN WOMAN Mari Miranda among 2 VICTIMS shot after gunmen fired 30+ ROUNDS AT SUV BOTH HOSPITALIZED & IN STABLE CONDITION https://t.co/6N1F1QLqdo
— RT (@RT_com) November 28, 2026
பின்னர் காரிலிருந்த விஜயை துப்பாக்கி முனையில் வெளியேற்றிய அவர்கள், காரிலிருந்த நகைகளுடன் ஓட்டம் பிடித்துள்ளார்கள் அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் விஜய் மற்றும் மாரி ஆகிய இருவரும் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
தற்போது அவர்கள் அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இந்த கொள்ளைச் சம்பவத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், விஜயின் காரை வழிமறிக்கவும், தப்பியோடவும், மூன்று வேன்கள் மற்றும் கார்களை அவர்கள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளதாகவும், அவர்களை தீவிரமாகத் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.