ஆபரேஷன் சிந்தூர்: இந்திய வீரர் வீரமரணம்
பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் சீஸ்ஃபயர் மீறலில் இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார்.
ஜம்மு & காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் புதன்கிழமை (மே 7) பாகிஸ்தான் நடத்திய சீஸ்ஃபயர் மீறலில், இந்திய இராணுவ வீரர் லான்ஸ் நாயக் தினேஷ் குமார் வீரமரணம் அடைந்தார்.
இவர் 5வது ஃபீல்ட் ரெஜிமென்ட்டைச் சேர்ந்தவர். பாகிஸ்தானின் கடுமையான வெடிகுண்டு தாக்குதலில் தீவிரமாக காயமடைந்த அவர் பின்னர் உயிரிழந்தார் என்று இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா துவக்கிய "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கையின் பின்னணியில் ஏற்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் கீழ், இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்காக வைத்து மிசைல் தாக்குதல் நடத்தியது.
#GOC and all ranks of #WhiteKnightCorps salute the supreme sacrifice of L/Nk Dinesh Kumar of 5 Fd Regt, who laid down his life on 07 May 25 during Pakistan Army shelling.
— White Knight Corps (@Whiteknight_IA) May 7, 2025
We also stand in solidarity with all victims of the targeted attacks on innocent civilians in #Poonch Sector.…
White Knight Corps வீரவணக்கம்
இந்திய இராணுவத்தின் White Knight Corps, அதன் X சமூகவலைத்தள பக்கத்தில், “05 ஃபீல்ட் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த லான்ஸ் நாயக் தினேஷ் குமாரின் உச்ச தியாகத்திற்கு ஜெ.ஓ.சி மற்றும் அனைத்து வீரர்களும் வீரவணக்கம் செலுத்துகின்றோம்.” என பதிவிட்டுள்ளது.
மேலும், தாக்குதலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் ஒற்றுமையாக நின்று வருவதாகவும் தெரிவித்தனர்.
இந்திய இராணுவம் தனது பதிலடி நடவடிக்கைகளை உறுதியோடு மேற்கொண்டு, எல்லைப் பகுதியிலுள்ள பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என உறுதிப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Operation Sindoor, LoC ceasefire violation 2025, Indian Army Poonch shelling, Lance Naik Dinesh Kumar, Pakistan shelling May 2025, Indian soldier martyred, India Pakistan border tension, White Knight Corps tribute, Poonch LoC news today, Indian Army latest news