தமிழ்நாடு, கர்நாடகாவை அடுத்து., பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்த மற்றொரு மாநிலம்
பஞ்சு மிட்டாய்.. இந்தப் பெயரைக் கேட்டாலே குழந்தைகள் துள்ளிக் குதிக்கின்றன. வாயில் கரையும் இந்த பஞ்சு மிட்டாய் சாப்பிடுவதில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால் இந்தியாவில் பல மாநிலங்கள் சமீபத்தில் இந்த பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்துள்ளன.
பஞ்சு மிட்டாய்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதால், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்கள் விற்பனைக்கு ஏற்கனவே தடை விதித்துள்ளன.
இப்போது சமீபத்தில் ஹிமாச்சல பிரதேசமும் இந்த பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்துள்ளது.
அதன் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனையை தடை செய்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த தடை ஒரு வருடத்திற்கு (மே 15, 2025 வரை) அமுலில் இருக்கும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பஞ்சு மிட்டாய் மாதிரிகளை சோதனை செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அவற்றில் ஆபத்தான நிறங்கள் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இவை உணவுப் பாதுகாப்புத் தரங்களுக்கு எதிரானவை என்று அறிக்கை வெளிப்படுத்தியது.
இவை பொது சுகாதாரத்தில், குறிப்பாக சிறு குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கடுமையான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Indian States that banned Cotton Candy, Tamil Nadu, Karnataka, Himachal Pradesh ban Cotton Candy