அமெரிக்காவில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் இந்திய மாணவி: துயரப் பின்னணி
இந்திய மாணவி ஒருவர் அமெரிக்காவில் எதிர்பாராவிதமாக விபத்தொன்றை சந்தித்த நிலையில், மருத்துவமனை ஒன்றில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.
யார் அந்த இளம்பெண்?
அவரது பெயர் லாகிஷெட்டி ஸ்பாண்டனா (22). இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்பாண்டனா, Elmhurst பல்கலையில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்துவந்தார்.

மே மாதம் 30ஆம் திகதி, சிகாகோ ரயில் நிலையம் ஒன்றில், 25 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்துள்ளார் ஸ்பாண்டனா.
படுகாயமடைந்த நிலையில் இல்லினாய்ஸிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்பாண்டனாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மூளையில் இரத்தக்கசிவு, முதுகெலும்பில் முறிவு, கல்லீரலில் காயம் உட்பட பல்வேறு பிரசினைகள் ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர்.
ஸ்பாண்டனா, தீவிர சிகிச்சைப்பிரிவில் கோமா நிலையிலிருக்கும் நிலையில், அவரது பெற்றோர் மகளை சந்திக்க அவசர விசா கிடைக்க உதவுமாறு இந்திய அரசைக் கோரியுள்ளனர்.
ஸ்பாண்டனா தனது பட்டப்படிப்பை முடிக்க இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |