பிரித்தானியாவிற்கு இதற்காக யாரும் வராதீர்கள்! எச்சரிக்கும் இந்திய மாணவர்கள்..காரணம் என்ன?
பிரித்தானியாவுக்கு பட்டப் படிப்பிற்காகவும், வேலையை தேடிக்கொண்டும் யாரும் வராதீர்கள் என அங்குள்ள இந்திய மாணவர்கள் எச்சரிக்கின்றனர்.
இங்கிலாந்தில் பட்டப்படிப்பு
இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பிரித்தானியாவிற்கு சென்று மேற்படிப்பை முடித்து, அங்கேயே செட்டில் ஆகும் நினைப்புடன் படையெடுக்கின்றனர்.
ஆனால், அங்கு தற்போது இருக்கும் நிலைமையே வேறு என தகவல்கள் அதிர்ச்சி தருகின்றன. அதாவது, பலருக்கும் அங்கு வேலை கிடைப்பதில்லை.
இதனை அங்குள்ள இந்திய மாணவர்களே கூறுகின்றனர். அத்துடன் பட்டப் படிப்பிற்காகவும், வேலையைத் தேடிக்கொண்டும் வர வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்கின்றனர்.
இங்கிலாந்தில் பட்டப்படிப்பிற்கு குறைந்தது 10 முதல் 15 லட்சமும், முதுகலைக்கு 20 முதல் 50 லட்சமும் செலவாகும். அதேபோல் Phd போன்ற படிப்புகளுக்கு 18-30 லட்சமும் செலவாகும். இதில் தங்குமிடம், உணவு, போக்குவரத்து உள்ளிட்ட தேவைகளுக்கு மட்டும் மாதம் ரூ. 2.5 லட்சம் வரை செலவாகும்.
இந்திய மாணவர்கள் எச்சரிக்கை
இங்கிலாந்து வந்த தன்னுடன் படித்த 90 சதவீத பேருக்கு அங்கு வேலை கிடைக்கவில்லை என, அங்கு வசிக்கும் இந்திய மாணவி ஜான்ஹவி ஜெயின் தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில், "இந்தியர்கள் கடனைப் பெற்று இங்கிலாந்திற்கு படிக்க செல்கின்றனர். ஆனால், அங்கும் வேலை இல்லை என்பதே நிதர்சனமாக இருக்கிறது. முதுகலை படிப்பிற்காக இங்கிலாந்தை தேர்வாக யாரும் கருத்தில் கொள்ளாதீர்கள்.
ஏற்கனவே பணம் இருக்கும் நபர் எனில் கவலை இல்லை. ஆனால், கடன் வாங்கி வருகிறீர்கள் எனில் அதை செய்யாதீர்கள். தொழில் தொடங்குங்கள், வேறு எதிலாவது முதலீடு செய்யுங்கள்" என கூறியுள்ளார்.
இந்த பதிவானது இரண்டு லட்சம் பேர் ஷேர் செய்ய வைரலாகியுள்ளது. ஜான்ஹவியின் தோழிகளும் இதையே கூறியுள்ளனர்.
18 தொழில்கள்
அவர் கூறுவதை உறுதிப்படுத்தும் வகையில்தான் அங்கு நிலைமையும் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, கடந்த 34 ஆண்டுகளாக இங்கிலாந்தில் வேலை வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.
குறிப்பாக, கடந்த காலாண்டில் 42,000 வேலை வாய்ப்புகள் வெட்டப்பட்டிருக்கின்றன. மொத்த வேலை வாய்ப்புகள் 7,61,000 என குறைந்திருக்கிறது. அங்கு 18 தொழில்களில் 13 தொழில்கள் வேலை வாய்ப்பு வெட்டு ஏற்பட்டிருக்கிறது.
இதனையே நிபுணர்கள் சிலர் கூறுகையில், "இங்கிலாந்தில் படித்தாலும், மாறி வரும் தொழில் சூழலுக்கு ஏற்ப தங்களை பொருத்திக்கொள்ள முடியாத மாணவர்களால் அங்கு வேலை செய்ய முடியாது" என்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |