இலங்கைக்கு வந்த அமெரிக்க இராணுவ விமானமும், இந்திய நீர்மூழ்கிக் கப்பலும் - பின்னால் இருக்கும் காரணம் என்ன?
கடந்த வருடம் அதாவது 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான C-17 Globe Masters விமானங்கள் இரண்டு இலங்கைக்கு வந்திருந்தன.
இலங்கை கட்டுநாயக்க சர்சதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அந்த விமானங்களுக்கு ஆயுதம் தரித்த அமெரிக்க இராணுவ வீரர்களே பாதுகாப்பு வழங்கியதாகவும் அந்த விமானத்தில் வந்த உயர் அதிகாரிகள் அமெரிக்க இராணுவத்தின் பாதுகாப்புடன் இலங்கை இராணுவன தலைமை காரியாலயத்திற்கும் இலங்கை புலனாய்வு பணியகத்திற்கும் பயணம் செய்து சந்திப்புகளை மேற்க்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
இலங்கயைில் அமெரிக்கா ஓர் இராணுவ தளத்தை அமைப்பதற்கான முயற்சியில் பகிரங்கமாகவே இறங்கி விட்டதன் வெளிப்பாடாகவே அந்த வருகை ஆய்வாளர்களால் பார்க்கப்பட்டது.
இந்த சம்பவம் நடைபெற்று சரியாக ஒரு வருடத்தில் அதாவது, 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் இந்தியா தனது 'INS Karanj' என்ற நீர்மூழ்கிக் கப்பலை இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தது.
இலங்கையின் சில முக்கியமான விமான நிலையங்கள், துறைமுகங்கள் வர்த்தக ரீதியாக இந்தியாவின் கைகளுக்கு செல்வதற்கான பேச்சு வார்ததைகள் மிக மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இந்த நிலையில் இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பலானது இலங்கைக்கு அனுப்பப்பட்டதானது அதுவும் இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படும் நேரத்தில் வந்தது பல்வேறு ஊகங்களுக்கு இடமளித்துள்ளது எனலாம்.
மேலும் இது குறித்து விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |