அமெரிக்காவில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்: உண்மையில் என்ன நடந்தது?
அமெரிக்காவில் இந்திய தொழில்நுட்ப நிபுணர் முகமது நிஜாமுதீன் பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சாண்டா கிளாராவில் 30 வயது மதிக்கத்தக்க இந்திய தொழில்நுட்ப நிபுணர் முகமது நிஜாமுதீன் பொலிஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகமது நிஜாமுதீன் தன்னுடைய ரூம்மேட்டை கத்தியால் குத்தியதாக காயப்படுத்தியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் முகமது நிஜாமுதீனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
சாண்டா கிளாரா பொலிஸார் வெளியிட்ட தகவலில், செப்டம்பர் 3ம் திகதி கத்திக்குத்து சம்பவம் குறித்து 911 க்கு அழைப்பு வந்ததாகவும், அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கத்திக்குத்து காயங்களால் பாதிக்கப்பட்ட ரூம்மேட்டை முகமது நிஜாமுதீன் பிடித்து வைத்து இருந்ததை பார்த்த உடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் நிஜாமுதீனை சுட்டுள்ளார்.
இதையடுத்து உள்ளூர் மருத்துவமனைக்கு நிஜாமுதீன் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச் சூடு குறித்து SCPD விசாரணை நடத்தி வருகிறது.
இது இனப் பாகுபாடு தாக்குதல்
இந்நிலையில் முகமது நிஜாமுதீன் இனப் பாகுபாடு காரணமாகவே சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தெலுங்கானாவின் மஹ்பூப் நகரை சேர்ந்த நிஜாமுதீன் குடும்பத்தினர், பொலிஸாரால் சுடப்படுவதற்கு முன்பு அவசர அழைப்பை அழைத்ததே நிஜாமுதீன் தான் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர் இனப் பாகுபாடு, ஊதிய மோசடி மற்றும் சட்டவிரோதமாக வேலையில் இருந்து நீக்கப்பட்டது போன்ற துன்புறுத்தல்களை நிஜாமுதீன் அனுபவித்து வந்ததாகவும், Linkedin பதிவுகளில் “வெள்ளையர்கள் மேலாதிக்கம்/ இனவெறி பிடித்த அமெரிக்க மனநிலை முடிவுக்கு வர வேண்டும் என குறிப்பிட்டு இருந்ததை குடும்பத்தினர் வெளிப்படுத்தியுள்ளனர்.
முகமது நிஜாமுதீன் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கல்லூரியில் கணினி அறிவியலில் முதுகலை பட்டம் பெற்ற பின் அங்கேயே பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |