கனடாவில் ரூ.70 லட்சம் சம்பளம் போதவில்லை., இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநர் கருத்து
கனடாவில் வாழும் இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநரின் உண்மையான கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவலாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அவர் தனது $115,000 (அதாவது சுமார் ரூ. 70 லட்சம்) சம்பளம் போதுமானதாக இல்லை என்று கூறுகிறார்.
கனடாவில் ரூ.60 லட்சம் சம்பளம் பெறும் இந்திய தொழில்நுட்ப நிபுணர்., அறை வாடகை ரூ.1 லட்சம் செலுத்தும் நிலை
இது ரொறன்ரோவில் வாழும் மக்களின் உயர்ந்த வாழ்க்கைச் செலவுகள் குறித்து விவாதங்கள் கிளம்பியுள்ளன.
இந்தக் கருத்து, பியுஷ் மோங்கா பகிர்ந்த வீடியோவில் வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில், மனைவி குழந்தையின் இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் தனது வாழ்க்கைச் செலவுகளைப் பற்றி ஆதங்கமாகப் பேசுகிறார்.
ஆண்டுக்கு "$100,000 என்பது போதவில்லை," என கூறிய அவர், தனது வீட்டு வாடகைக்கு மட்டுமே மாதம் $3,000 (சுமார் ரூ. 2,51,130) செலவாகிறது என்றும் தெரிவித்தார்.
மோங்கா, "நீங்கள் எவ்வளவு சம்பளம் பெறுகிறீர்கள்?" என கேட்டபோது, அந்த நபர் "நான் $100,000-க்கு மேல் சம்பளம் பெறுகிறேன், ஆனால் இப்போது அது போதாது, குறிப்பாக ரொறன்ரோவின் மத்திய பகுதியில் வாழும்போது போதாது," என பதிலளித்தார்.
இந்த வீடியோவுக்குப் பின்னர், பல சமூக வலைதள பயனர்கள் தங்களின் கருத்துகளை பதிவு செய்தனர். சிலர் அவரது நிலையைப் புரிந்துகொண்டனர், சிலர் அதனை விமர்சித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada Cost of Living, Indian-origin techie says Rs 70 lakh salary in Canada is not enough, Toronto cost of living