கால்பந்து உலக கோப்பைக்காக கத்தார் வந்த இந்தியர்! அங்கு திடீரென கோடீஸ்வரராக அவரை மாற்றிய அதிர்ஷ்டம்
FIFA கால்பந்து உலக கோப்பைக்காக கத்தாரில் இருந்த போது இந்தியர் ஒருவர் பெரும் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
பிக் டிக்கெட்
இந்தியரான ஹரி ஜெயராம் துபாயில் உள்ள ஹொட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் அபுதாபியின் பிக் டிக்கெட் லொட்டரியில் Dh1 மில்லியன் (கிட்டத்தப்பட்ட ரூ. 10 கோடி) பரிசை வென்றுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹரி கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து பிக் டிக்கெட்களை வாங்கி வந்த ஹரிக்கு தற்போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
Khaleej Times
கத்தாரில் இருந்த போது..
இதில் சுவாரஸ்யமாக, பிக் டிக்கெட் பிரதிநிதிகள் அவரை முதலில் தொடர்பு கொண்டபோது, FIFA உலகக் கோப்பைக்காக கத்தாரில் இருந்தார். ஹரி கலீஜ் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில், வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்னும் 30 மில்லியன் திர்ஹம் பரிசை வெல்வேன் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.
டிசம்பர் 3 ஆம் திகதி 30 மில்லியன் திர்ஹாம் என்ற மெகா பரிசையும் வெல்லும் வாய்ப்பு ஹரிக்கு இன்னும் உள்ளது குறிப்பிடத்தக்கது.