திருமணத்தில் சாப்பிட டோக்கன்... இந்திய இளம்பெண் எதிர்கொண்ட வித்தியாசமான அனுபவம்
Indian woman shares a surprising Korean wedding custom: தென்கொரியாவில் திருமணம் ஒன்றிற்குச் சென்ற இந்திய இளம்பெண்ணொருவர் அங்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை எதிர்கொண்டுள்ளார்.
தென்கொரியாவில், ஆய்வகம் ஒன்றில் வேலை செய்துவரும் ஜிக்யாசா என்னும் இந்திய இளம்பெண், தன்னுடன் பணிபுரியும் கொரியப்பெண் ஒருவரின் திருமணத்துக்கு, தன் சகப் பணியாளர்களான ஒரு இந்தியர் மற்றும் இலங்கையருடன் சென்றுள்ளார்.
வித்தியாசமான அனுபவம்
திருமண நிகழ்வுகள் ஒரு மணி நேரத்துக்குள் முடிவடைய, அனைவரும் சாப்பிடப் புறப்படுவதைக் கண்ட ஜிக்யாசாவும் அவரது சகப் பணியாளர்களும் அவர்களுடன் சாப்பிட புறப்பட்டுள்ளார்கள்.

வரிசையில் நின்று உணவு விநியோகிக்கப்படும் அறையை அவர்கள் அடைய, அங்கிருந்த பாதுகாவலர் அவர்களிடம் டோக்கன் எங்கே என்று கேட்டிருக்கிறார்.
இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லையாம். மொழியும் புரியாமல் இவர்கள் என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப் போய் நிற்க, மற்றொரு சகப் பணியாளரான கொரியப் பெண் உதவிக்கு வந்துள்ளார்.
அதாவது, கொரியாவில் திருமணத்துக்கு செல்பவர்கள், திருமண மண்டபத்திலுள்ள ரிசப்ஷனுக்கு சென்று, தங்கள் பரிசுகளை அவர்களிடம் கொடுத்துவிடவேண்டுமாம்.
அதை வாங்கிக்கொண்டு, அவர்கள் ஆளுக்கொரு டோக்கன் கொடுப்பார்களாம்.
சாப்பிடப் போகும்போது, அந்த டோக்கனை காட்டினால்தான் சாப்பிடும் இடத்துக்குள் அனுமதிக்கப்படுவார்களாம் விருந்தினர்கள்.
அடடா, எங்கள் ஊரில் நாங்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு கூட, நேரடியாக மணமக்களைப் பார்த்து வாழ்த்து தெரிவித்து, அவர்களிடம்தான் பரிசுகளைக் கொடுப்போம்.
இது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது என்கிறார் ஜிக்யாசா!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |