அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி!
அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இந்திய பெண் ஒருவர் கையும் களவுமாக சிக்கிகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்
அமெரிக்காவில் டார்கெட் கடையில் திருட்டு சம்பவத்தின் போது கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்ணின் வீடியோ வெளியாகியுள்ளது.
கடையில் இருந்த சிசிடிவி காட்சியில் சம்பந்தப்பட்ட இந்திய பெண், பொருட்கள் நிரம்பிய தள்ளுவண்டியை பணம் செலுத்தாமல் எடுத்து சென்றது பதிவாகியுள்ளது.
மேலும் இவர் வழக்கமான வாடிக்கையாளர் என்றும், முதல் முறையாக திருடிய போது பிடிபட்டார் என்றும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
விசாரணையில் இந்திய பெண்ணுக்கு மூச்சு திணறல்
இதையடுத்து கைது செய்யப்பட்ட இந்திய பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்ட போது, கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் மன உளைச்சலுடன் மூச்சுத் திணறலுடன் காணப்பட்டார்.
பின்னர் நீங்கள் வெளியே செல்ல முடியாது என்று அதிகாரிகள் சொன்னதும், இந்திய பெண் அழ தொடங்குகிறார். மேலும் மூச்சு விட முடியாமல் திணறிய போது அந்த பெண்ணை சமாதானப்படுத்தி மூச்சை நன்கு இழுக்குமாறு அறிவுறுத்துகின்றனர்.
பின்னர் அவரிடம் ஆங்கிலம் பேசுவீர்களா என அதிகாரிகள் கேட்க, சரளமாக வராது ஆனால் பேசுவேன் என்றும், தனது தாய் மொழி குஜராத்தி என்றும், இந்தியாவை சேர்ந்தவர் என்றும் உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |