நான் எதிர்கொண்ட பிரச்சினைகள்! வெளிநாடு ஒன்றில் சாதித்து உயர்பதவிக்கு சென்ற இந்தியப்பெண்! அவர் யார் தெரியுமா?
நியூசிலாந்தில் காவல்துறையில் உயர் பொறுப்பில் இந்திய பெண் பணி அமர்த்தப்பட்டுள்ளார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் மந்தீப் கவுர். இவர் சிறுவயதிலேயே தனது பெற்றோருடன் நியூசிலாந்துக்கு இடம்பெயர்ந்தார்.
இந்த நிலையில் கவுர் 2004ம் ஆண்டு அந்நாட்டின் காவல்துறையில் பணிக்கு சேர்ந்துள்ளார்.
கலாச்சாரம் மற்றும் தனிட்டப்பட்ட முறையிலான விமர்சனங்களை எதிர்கொண்ட கவுர் இன்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்துள்ளார்.
மந்தீப் கவுரை நியூசிலாந்தின் உயர் பொலிஸ் அதிகாரியாக பதவி உயர்வு செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
நியூசிலாந்து காவல்துறையில் வலிமைமிக்க ஒரு பொலிஸ் அதிகாரியாக வலம் வரும் கவுர் தற்பொழுது வில்லிங்டனில் உயர் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இதனிடையில் நியூசிலாந்தில் குடிப்பெயர்ந்து அந்நாட்டு அரசின் உயர் அதிகாரியாக மாறும் வரை தான் எதிர்கொண்ட பிரச்சனைகளை தனது சுயசரிதையில் கவுர் எழுதியுள்ளார்.
