காபூலில் இருந்து தப்பி சொந்த ஊருக்கு வந்த இந்தியப்பெண்! விமானத்தில் இருக்கை இல்லாமல் தரையில் அமர்ந்து... அவரின் திக் திக் அனுபவம்
காபூலில் இருந்து தப்பி இந்தியாவுக்கு வந்த பெண்ணொருவர் அந்த திக் திக் நிமிடங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் மொத்த நாட்டையும் தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் பலர் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறும் முயற்சியை மேற்கொண்டனர்.
அந்த வகையில் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் டெஹராடூனை சேர்ந்த சவிதா சஹி என்ற பெண் ஆப்கானிஸ்தானில் கடந்த 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.
சவிதா காபூலில் நேட்டோ மற்றும் அமெரிக்க இராணுவத்தின் மருத்துவ குழுவில் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில் தாலிபான்கள் சமீபத்தில் அங்கு ஆட்சியை பிடித்த நிலையில் ஒருவழியாக தப்பி சொந்த ஊருக்கு இரு தினங்களுக்கு முன்னர் வந்து சேர்ந்தார் சவிதா.
அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் இதுபோன்ற மோசமான சூழ்நிலையை இதுவரை நான் பார்த்ததில்லை. நேட்டோ படைகள் மற்றும் அமெரிக்க இராணுவத்தின் மருத்துவக் குழுவில் பணிபுரியும் போது, ஆப்கானிஸ்தானில் எல்லாமே அவ்வளவு சீக்கிரம் மாறும் என நினைக்கவே இல்லை. சுற்றிலும் கூக்குரல் மற்றும் ஓலம் எழும்.
ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய திகதிகள் தாலிபான்கள் திடீரென காபூலைக் கைப்பற்றினர், அதன் பிறகு மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற போராடியதை பார்த்தேன்.
அமெரிக்க இராணுவம் மற்றும் நேட்டோ படைகளுடன் பணிபுரியும் மக்கள் மாலை 6 மணியளவில் இராணுவ விமான நிலையத்தில் அதிகாரிகளை அணுகியவுடன், தாலிபான் போராளிகள் எறிகணை வீசத் தொடங்கினர். அத்தகைய சூழ்நிலையில், அனைத்து மக்களும் விமான நிலையத்திலிருந்து தங்கள் முகாமுக்குத் திரும்பினர் மற்றும் இரவு அல்லது மறுநாள் காலை வரை காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
அதிகாலை 3:30 மணியளவில், காபூலில் இருந்து வெவ்வேறு விமானங்களில் வந்த மக்கள் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்திய தூதரக அதிகாரியின் உதவியுடன், அமெரிக்க இராணுவ மருத்துவ முகாமில் இருந்து மொத்தம் ஏழு பேர் இந்திய விமானப்படை விமானத்தில் காலை 6:10 மணிக்கு அமர்ந்தனர்.
இந்திய விமானப்படை விமானத்தில் இருக்கை கிடைக்காமல் கூட, பலர் தரையில் அமர்ந்து பயணித்தார்கள் என கூறியுள்ளார்.