ஜப்பான் நிலநடுக்கம்: டோக்கியோவில் வாழும் இந்தியப் பெண்ணொருவர் சந்தித்த திகில் அனுபவம்
ஜப்பானில் வாழும் இந்தியப் பெண்ணொருவர் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஜப்பான் நிலநடுக்கம்
நேற்று திங்கட்கிழமை மாலை, ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று ஜப்பானைத் தாக்கியது.

இந்த நிலநடுக்கத்தால் சுமார் 33 பேர் காயமடைந்துள்ளதாகவும், குறிப்பாக, Hachinohe என்னுமிடத்தில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்தவர்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், டோக்கியோவில் வாழும் இந்தியப் பெண்ணொருவர், தான் ஜப்பானில் பல நூறு முறை நிலநடுக்கங்களை சந்தித்துள்ளதாகவும், ஆனால், இம்முறை ஏற்பட்டதுபோல் ஒரு பயங்கர நிலநடுக்கத்தை தான் உணர்ந்ததில்லை என்றும் கூறியுள்ளார்.
தான் வெளியிட்டுள்ள வீடியோவில், அந்த நிலநடுக்கம் நீண்ட நேரம் நீடித்ததாகத் தெரிவித்துள்ள அந்தப் பெண், தான் வாழும் அடுக்குமாடிக் குடியிருப்பை காட்டுகிறார்.
விடயம் என்னவென்றால், அங்கு வாழும் ஒருவர் கூட தங்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளின் வலிமையை நம்புவதாகவும், பாரிய நிலநடுக்கங்களின்போதும் தங்கள் வீடுகளுக்குள் தாங்கள் பாதுகாப்பாக இருக்கமுடியும் என அவர்கள் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்
அந்தப் பெண். அந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், பின்னர் அது வாபஸ் பெறப்பட்டாலும் 40 முதல் 50 சென்றிமீற்றர் உயரமுடைய அலைகள் எழுந்ததைப் பார்த்ததாக கடற்கரையோரம் வாழும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |