இரு பெண்களின் காதல்! தமிழகம் வருமாறு இலங்கை பெண்ணை அழைத்த இந்தியப்பெண்! கைதான பின்னணி
இலங்கையில் உள்ள காதலியை தேடி இந்தியாவை சேர்ந்த இளம்பெண் சென்ற நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த 24 வயது பெண்ணிற்கும், இலங்கையை சேர்ந்த 33 வயதான திருமணமான பெண்ணிற்கும் சமூகவலைதளங்கள் மூலம் நட்பாகி பின்னர் காதலாக மாறி அசாதாரண உறவுமுறை ஏற்பட்டிருக்கிறது.
தமிழத்தை சேர்ந்த பெண், இலங்கை பெண்ணை இந்தியாவுக்கு வருமாறு அழைத்திருக்கிறார். ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் குடிவரவு திணைக்களம் பணிகள் காரணமாக அவரால் பாஸ்போர்ட்டை உடனடியாக பெற முடியவில்லை.
இதையடுத்து இந்தியப் பெண் ஜூன் 20 ஆம் திகதி சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து அந்த பெண்ணின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இருவரின் உறவுமுறைக்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்து பொலிஸில் புகார் செய்துள்ளார்.
இதனையடுத்து இரு பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணையின் போது இலங்கை பெண் கூறுகையில், என்னை என் காதலியுடன் இந்தியாவுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் இருவரும் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டினார்.
இதனை தொடர்ந்து இரண்டு பெண்களையும் மனநல மருத்துவரிடம் ஆஜர்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள், பரிசோதனை அறிக்கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த்தப்படவுள்ளனர்