மகள் பிறந்த அதிர்ஷ்டம் - ரூ.49 கோடி பரிசு வென்ற இந்தியர்
மகள் பிறந்த 2 மாதத்தில் இந்தியர் ஒருவர் ரூ.49 கோடி பரிசு வென்றுள்ளார்.
ரூ.49 கோடி பரிசு வென்ற இந்தியர்
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கட்டபாடி மட்டுவை சேர்ந்தவர் 33 வயதான சாந்தனு ஷெட்டிகர்(Shantanu Shettygar).

இவர் கடந்த 8 ஆண்டுகளாக ஓமனில் சில்லறை விற்பனை கடையில் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் நண்பர்கள் லொட்டரி வாங்குவதை பார்த்து, இவரும் கடந்த 5 ஆண்டுகளாக லொட்டரி வாங்கி வருகிறார்.
தற்போது அபுதாபி பிக்டிக்கெட் லொட்டரியில் 20 மில்லியன் திர்ஹம் பரிசு வென்றுள்ளார். இந்திய மதிப்பில் சுமார் ரூ.49 கோடி ஆகும்.
மகள் பிறந்த அதிர்ஷ்டம்
இது குறித்து பேசிய அவர், "நான் வேலையில் கவனம் செலுத்தியதால் நேரலையை பார்க்க முடியவில்லை. நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் முதலில் 2 முறை அழைத்த போது ஸ்பேம் கால் என நினைத்து நான் எடுக்கவில்லை. 3வது முறை அவர்கள் அழைத்து பரிசு வென்றதை கூறிய போது ஆச்சரியமடைந்தேன். என்னால் முதலில் நம்ப முடியவில்லை.

15 ஆண்டுகளாக லொட்டரி வாங்குபவர்களுக்கு கூட பரிசு கிடைக்கவில்லை. என் மகள் இந்த உலகத்திற்கு அதிர்ஷ்டத்துடன் வந்தாள் என்று நான் நினைக்கிறேன். எனக்கு, அதுதான் மிகப்பெரிய ஆசீர்வாதம்.
இந்த பணத்தை எவ்வாறு செலவிடுவது என்பது குறித்து இன்னும் திட்டமிடவில்லை" என தெரிவித்துள்ளார்.
3 ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு திருமணமாகியுள்ளது. கடந்த டிசம்பர் 27 ஆம் திகதி தனது முதல் குழந்தையாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
இன்னும் அவர் குழந்தையை பார்க்கவில்லை. குழந்தைக்கு பெயரிடும் விழாவின் போது இந்தியாவிற்கு சென்று குழந்தையை பார்க்க உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |