லொட்டரியில் 35 கோடி ரூபாய் பரிசு: இந்தியரின் விருப்பம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர் ஒருவருக்கு லொட்டரியில் 35 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.
இந்தியரின் விருப்பம்
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சந்தீப் குமார் பிரசாத் (30), ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக டெக்னீஷியனாக பணிபுரிந்துவருகிறார்.
ஆகத்து மாதம் 19ஆம் திகதி, அவர் லொட்டரிச்சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.
நேற்று, அதாவது, செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி, அவர் வாங்கிய லொட்டரிச்சீட்டுக்கு 15 மில்லியன் அரபு அமீரக திராம்கள் பரிசு விழுந்துள்ளது.
இந்திய மதிப்பில் அது சுமார் 35 கோடி ரூபாய் ஆகும். வாழ்வில் முதன்முறையாக தனக்கு இப்படி ஒரு பெரிய சந்தோஷம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள பிரசாத், தான் தன் சொந்த நாடான இந்தியாவுக்குத் திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக தனது தந்தையின் உடல் நலம் மோசமாகிவரும் நிலையில், தற்போது தான் இந்தியா திரும்பி தன் குடும்பத்துடன் சேர்ந்து வாழ வாய்ப்புக் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கும் பிரசாத், இந்தியாவில் சொந்தத் தொழில் துவங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |