சீனப் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டும் இந்தியர்கள்.., ஆய்வில் வெளிவந்த தகவல்
இந்தியர்கள் அதிகமானோர் சீனப் பொருட்களை வாங்க தொடங்கியுள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆய்வில் வெளியான தகவல்
கடந்த 12 மாதங்களில் 62 சதவீத இந்தியர்கள் சீனப் பொருட்களை வாங்க தொடங்கியுள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற அமைப்பு இந்த ஆய்வை நடத்தியுள்ளது. இதன்மூலம் கடந்த 12 மாதங்களில் சீனப் பொருட்களை வாங்கும் இந்திய நுகர்வோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
அதாவது, இந்திய நுகர்வோரின் எண்ணிக்கை 55 சதவீதத்தில் இருந்து 62 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சீனப் பொருட்களான கேஜெட்டுகள், மின்னணு சாதனங்கள் மற்றும் மொபைல் பாகங்கள் ஆகிய பொருட்களை இந்தியர்கள் அதிகம் வாங்குகின்றனர்.
இந்த கணக்கெடுப்பின் போது பதிலளித்தவர்களில் 10 பேரில் இருவர் தங்களுடைய மொபைல்களில் சீன ஆப்களை வைத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |