பிரித்தானியாவுக்கு அதிக அளவில் புலம்பெயர்ந்தவர்களும் வெளியேறியவர்களும் இந்த நாட்டவர்கள்தான்
பிரித்தானியாவுக்கு அதிக அளவில் புலம்பெயர்ந்தவர்கள் இந்தியர்கள்தான் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவுக்கு அதிக அளவில் புலம்பெயர்ந்தவர்கள்...
2025 ஜூன் வரையிலான காலகட்டத்தில், பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத நாட்டவர்களில் இந்தியர்கள்தான் அதிகம் என, நேற்று, அதாவது, நவம்பர் மாதம் 27ஆம் திகதி வெளியான, பிரித்தானிய தேசிய புள்ளியியல் அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அந்த காலகட்டத்தில் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் எண்ணிக்கை, கல்வி பயில்வதற்காக வந்தவர்கள் 90,000 பேர், வேலைக்காக வந்தவர்கள் 46,000 பேர் மற்றும் பிற காரணங்களுக்காக வந்தவர்கள் 9,000 பேர்.
விடயம் என்னவென்றால், அதே காலகட்டத்தில் பிரித்தானியாவிலிருந்து அதிகம் வெளியேறியவர்களும் இந்தியர்கள்தான்.
ஆம், கல்வி தொடர்பிலான காரணங்களுக்காக பிரித்தானியா வந்த இந்தியர்களில் 45,000 பேரும், வேலை தொடர்பிலான காரணங்களுக்காக பிரித்தானியா வந்தவர்களில் 22,000 பேரும், பிற காரணங்களுக்காக வந்தவர்களில் 7,000 பேரும் பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |