பிரித்தானியாவில் நிகர புலம்பெயர்தல் எண்ணிக்கை வீழ்ச்சி: சொல்லப்படும் காரணங்கள்
ஜூன் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் பிரித்தானியாவுக்கு நீண்டகால நிகர புலம்பெயர்வு 204,000 ஆகக் குறைந்துள்ளது என்றே உத்தியோகப்பூர்வ தரவுகளில் இருந்து தெரிய வருகிறது.
அரசியல் பேசுபொருளாக
ஒரு வருடத்திற்கு முந்தைய எண்ணிக்கையை விட மூன்றில் இரண்டு பங்கு குறைவு இது என்றே தெரிவிக்கின்றனர். அரசாங்கக் கொள்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

சட்டப்பூர்வமான மற்றும் சட்டவிரோதமான குடியேற்றம், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பிரித்தானியாவில் அரசியல் பேசுபொருளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
பிரித்தானியாவின் அடுத்தடுத்த அரசாங்கங்கள் கடுமையான விசா விதிகள் மற்றும் அதிக சம்பள வரம்புகள் மூலம் இவ்வாறான வருகையைக் கட்டுப்படுத்த முயற்சிகள் முன்னெடுத்துள்ளன.
இந்த நிலையில், குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளுடன் பரப்புரை செய்து கருத்துக் கணிப்புகளில் இரட்டை இலக்க முன்னிலை வகிக்கும் நைகல் ஃபராஜின் பிரபலமான Reform UK கட்சியை எதிர்கொள்ள, லேபர் அரசாங்கம் கொள்கைகளை மேலும் இறுக்கி வருகிறது.

இதனிடையே, கடந்த வாரம் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் திருத்தப்பட்ட தரவுகள், நிகர குடியேற்றம் முன்னதாகவே உச்சத்தை எட்டியதையும், முன்பு நினைத்ததை விட அதிக அளவில் - மார்ச் 2023 வரையிலான 12 மாதங்களில் 944,000 ஆக உயர்ந்ததையும் பதிவு செய்துள்ளது.
பத்து ஆண்டுகளாக
ஆனால், கடந்த வார திருத்தப்பட்ட புள்ளிவிவரங்கள் 2024 இல் எண்ணிக்கை 345,000 ஆகக் குறைந்துள்ளதாகக் காட்டுகின்றன. எண்ணிக்கை குறைந்த போதிலும், பொதுமக்கள் குடியேற்றத்தை நாட்டின் முக்கியப் பிரச்சினையாகக் கருதுகின்றனர்.
மட்டுமின்றி, பிரான்சில் இருந்து சிறு படகுகள் வழியாக புகலிடம் கோரி வருபவர்களால்தான் சிக்கல் என பொதுமக்கள் கருதுவதாக பரவலாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, அகதி அந்தஸ்தை தற்காலிகமாக்குதல், சட்டவிரோதமாக வருபவர்களை நாடு கடத்துவதை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட விரிவான சீர்திருத்தங்களை இந்த மாதம் அரசாங்கம் அறிவித்தது.

அத்துடன் சில வெளிநாட்டு தொழிலாளர்கள் குடியேறிய நிலையைப் பெறுவதற்கான தகுதி காலத்தை பத்து ஆண்டுகளாக இரட்டிப்பாக்கியுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் தொழிலாளர் புலம்பெயர்தலுக்கு மிகப்பெரிய காரணியாக இருந்த முதியோர் காப்பக ஊழியர்கள் வழியை ரத்து செய்யும் கொள்கை ஜூலை மாதம் அமுலுக்கு வந்தது, மேலும் வரும் ஆண்டுகளில் இப்படியான எண்ணிக்கை அதிரடியாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |