அமெரிக்காவில் லொறி மோதிய விபத்து: இந்தியருக்கு 45 ஆண்டுகள் சிறைக்கு வாய்ப்பு!
அமெரிக்காவில் நடந்த சாலை விபத்து சம்பவத்தில் இந்தியருக்கு 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்தில் 3 பேர் பலி
கடந்த மாதம் 12ம் திகதி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் நெடுஞ்சாலையில் லொறி ஒன்று திடீரென திரும்பியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்திய வம்சாவளி நபர் அரி ஜிந்தர் சிங் என்பவர் ஓட்டிய லொறி, மினி வேன் ஒன்றின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் வரை உயிரிழந்தனர்.
இதையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய குற்றத்தின் கீழ் அரி ஜிந்தர் சிங் கைது செய்யப்பட்டார்.
சட்டவிரோத குடியேற்றம்
பின்னர் நடந்த விசாரணையில் அரி ஜிந்தர் சிங் அமெரிக்காவிற்கு 2018ம் ஆண்டு சட்டவிரோதமாக நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புளோரிடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரி ஜிந்தர் சிங்-கிற்கு கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், அரி ஜிந்தர் சிங் குடும்பத்தினர் அவருக்கு குறைந்த பட்ச தண்டனையை வழங்கி அமெரிக்கா கருணை காட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |