அமெரிக்கா கைப்பற்றிய ரஷ்ய கப்பலிலிருந்த இந்தியர்கள் விடுவிப்பு
வட அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்கா கைப்பற்றிய ரஷ்ய கப்பலிலிருந்த இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா கைப்பற்றிய ரஷ்ய கப்பல்
கடந்த வாரம், வட அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த Marinera என்னும் ரஷ்யக் கொடி ஏற்றப்பட்ட கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது.

Credit : AFP
அந்தக் கப்பல், ரஷ்யா, வெனிசுலா, ஈரான் போன்ற தடை செய்யப்பட்ட நாடுகளுக்காக எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல் என அமெரிக்க தரப்பு கூறியிருந்தது.
கைப்பற்றப்பட்ட அந்த கப்பலில் உக்ரைன், ஜார்ஜியா, ரஷ்யா நாட்டவர்களுடன் இந்தியர்களான மூன்று பணியாளர்களும் இருந்தனர்.
இந்நிலையில், அந்த இந்தியர்கள் மூவரும் நேற்று விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Credit : Blitzindiamedia.com
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக Sergio Gor என்பவர் பொறுப்பேற்ற அதே நாளில் அந்த இந்தியப் பணியாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |