ஜஸ்பிரித் பும்ரா அவருக்கு அருகில் கூட நெருங்க முடியாது! முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கருத்து
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி-க்கு அருகில் கூட இல்லை என்று பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
காயத்தில் இருந்த மீண்ட ஜஸ்பிரித் பும்ரா
கடந்த சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு துறையில் முதன்மை வீரராக ஜஸ்பிரித் பும்ரா(Jasprit Bumrah) திகழ்ந்து வருகிறார். இவரது பந்து வீச்சு இந்திய கிரிக்கெட் அணிக்கு மிக முக்கிய பலமாக பார்க்கப்பட்டு வருகிறது.
29 வயதான ஜஸ்பிரித் பும்ரா இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 128 விக்கெட்டுகளையும், 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகளையும் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடி 70 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
BCCI
ஆனால் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாமல் இருந்த பும்ரா, தற்போது மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
ஷாஹீன் அப்ரிடி-க்கு அருகில் கூட இல்லை
இந்நிலையில் Paktv.tvயில் பேசி இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக், “பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி மிகச் சிறந்த வீரர், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அவரை நெருங்க மாட்டார் என கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப் மற்றும் ஷாஹீன் ஆகியோரில் யார் சிறந்தவர் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, மூவரும் சிறந்த வீரர் என்று அப்துல் ரசாக் பதிலளித்துள்ளார்.
BCCI/AFP
22 வயதான ஷாஹீன் அப்ரிடி(Shaheen Afridi) 25 டெஸ்டில் 99 விக்கெட்டுகளையும், 32 ஒருநாள் போட்டிகளில் 62 விக்கெட்டுகளையும் மற்றும் 47 டி20 போட்டிகளில் 58 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களின் செயல் திறனும் கிட்டத்தட்ட சமமாகவே இருக்கும் நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரின் கருத்து இந்திய ரசிகர்கள் மத்தியில் சிடுசிடுப்பை ஏற்படுத்தியுள்ளது.