மிகக்குறைந்த விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய Zelo Electric
இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சார ஸ்கூட்டராக Zelo Electric நிறுவனம் Knight+ மொடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
Zelo Electric Knight+ மொடலின் ஆரம்ப விலை ரூ.59,990 (Ex-Showroom) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரை ஒருமுறை charge செய்தால் 100 கி.மீ. (Range) பயணிக்கலாம். இதில் 1.8kWh LFP (Lithium Ferrous Phosphate) பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது வெப்ப நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்கிறது.
இதன் 1.5kW மோட்டார் மணிக்கு 55 கி.மீ. வேகத்தை எட்டும் திறன்கொண்டது.
மேலும் இந்த ஸ்கூட்டர் பல பிரிவுகளில் முதண்மையான அம்சங்களைக் கொண்டுள்ளது.
Hill Hold Control, Cruise Control, Follow-Me-Home Headlamps, USB Charging Port, Removable Battery என பல முக்கிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர் 6 வண்ணங்களில் கிடைக்கின்றன.
Knight+ ஸ்கூட்டர் இந்திய மக்களின் தினசரி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக Zelo Electric நிறுவனத்தின் இணை நிறுவனர் முகுந்த் பாஹேதி கூறியுள்ளார்.
Zelo Electric நிறுவனம் தற்போது 4 மொடல்களை வழங்குகிறது. Zoop, Knight, Zaeden ஆகிய மூன்று குறைந்த வேக மின் ஸ்கூட்டர்கள் மற்றும் ஒரு உயர் வேக RTO-பதிவு செய்யவேண்டிய Zaeden+ மொடலையும் வழங்குகிறது.
இந்நிலையில், புதிய Knight+ மொடலின் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. ஆகஸ்ட் 20 முதல் விநியோகம் தொடங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Indias cheapest EV Scooter, Zelo Electric launched Indias cheapest EV Scooter, Zelo Electric Knight+, Zelo Electric Knight+ price, Zelo Knight plus electric scooter, Zelo Knight+ spec and price, best electric scooter in India