இந்தியாவில் Tesla-வின் முதல் ஷோரூம்.! ஏப்ரல் முதல் விற்பனை
உலகின் மிகப்பெரிய மின்சார வாகன (EV) உற்பத்தியாளரான டெஸ்லா (Tesla) இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் திறக்க உள்ளது.
இது மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) நடைபெறும். இதற்கான ஒப்பந்தத்தை நிறுவனம் சமீபத்தில் இறுதி செய்துள்ளது.
குத்தகை ஒப்பந்தம்
தகவல்களின்படி, டெஸ்லா பி.கே.சியில் உள்ள ஒரு வணிக கோபுரத்தின் தரை தளத்தில் 4,000 சதுர அடி இடத்தை எடுத்துக்கொண்டுள்ளது. இங்கே டெஸ்லா அதன் கார் மாடல்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யவுள்ளது.
டெஸ்லா நிறுவனம் ஒரு சதுர அடிக்கு சுமார் 900 ரூபாய் அல்லது இந்த இடத்திற்கு சுமார் 35 லட்சம் ரூபாய் மாத வாடகை செலுத்தவுள்ளதாகவும், இந்த குத்தகை ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெஸ்லாவின் அடுத்த ஸ்டோர் டெல்லியில்
நிறுவனம் தனது கடையை டெல்லி மற்றும் மும்பையில் திறக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, டெல்லியின் ஏரோசிட்டி வளாகத்தில் டெஸ்லா அதன் இரண்டாவது ஷோரூமை திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையின் பி.கே.சி.யில் ஒரு ஷோரூம் திறந்து, இந்தியாவில் பணியிடங்களை நிரப்பிய பிறகு, டெஸ்லா ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவில் கார்களை விற்பனை செய்யத் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
டெஸ்லா தற்போது இந்தியாவில் ஒரு உற்பத்தி ஆலையை அமைக்காது. ஜேர்மனியின் பெர்லின்-பிராண்டன்பர்க்கில் உள்ள பிரம்மாண்ட தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட கார்களை இந்தியாவுக்கு கொண்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Tesla India, Tesla Mumbai Showroom, India's First Tesla Showroom