அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ள இந்தியா., பின்தங்கிய பாகிஸ்தான்
ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் (SIPRI) வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவின் அணு ஆயுத கையிருப்பு 190-ஆக உயர்ந்துள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானின் அணு ஆயுத கையிருப்பு சுமார் 170-ஆக உள்ளது.
இதனால், இந்தியா பாகிஸ்தானை விட 20 அணு ஆயுதங்கள் அதிகமாக வைத்திருப்பதாக SIPRI தெரிவித்துள்ளது.

2025-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட கடுமையான எல்லைத் தகராறு, "அசாதாரணமான இராணுவ நெருக்கடி" என SIPRI தெரிவித்துள்ளது.
அந்த மோதலில், இந்தியா பாகிஸ்தானின் ஏவுகணை மற்றும் விமான தளங்களை தாக்கியது. எனினும், இரு நாடுகளும் நிலைமை மேலும் மோசமடையாமல் தடுக்க நடவடிக்கை எடுத்ததாக அறிக்கை கூறுகிறது.
இந்தியாவின் ஆயுத மேம்பாடு இந்தியா, நீண்ட தூர இலக்குகளை அடையக்கூடிய புதிய ஏவுகணை அமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இது சீனாவை நோக்கிய பாதுகாப்பு திட்டங்களுடன், பாகிஸ்தானுடனான போட்டியையும் கருத்தில் கொண்டுள்ளது.
பாகிஸ்தான் தற்போது, புதிய ஏவுகணை அமைப்புகள் மற்றும் அணு பொருட்களைச் சேமிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
SIPRI, 2025-ல் இந்திய-பாகிஸ்தான் மோதலில், இரு நாடுகளும் முதல்முறையாக சைபர் தாக்குதல்களை இராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் தடுப்பு மற்றும் போர் முறைகள் எவ்வாறு மாறுகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.
உலகளவில், 2026 ஜனவரியில் மொத்த அணு ஆயுத கையிருப்பு 12,187 என SIPRI மதிப்பிட்டுள்ளது. 9 அணு ஆயுத நாடுகளும் தங்கள் ஆயுதங்களை மேம்படுத்தி, புதிய அணு திறன் கொண்ட அமைப்புகளை உருவாக்கி வருகின்றன. இந்நிலையில், அணு ஆயுதங்களின் ஆபத்து அதிகரித்து வருகிறது என SIPRI எச்சரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |