45,000 டன் சமையல் எரிவாயு: ஹார்முஸை வெற்றிகரமாக கடந்த இந்தியாவின் சர்வ சக்தி கப்பல்
ஹார்முஸ் ஜலசந்தியை இந்தியாவின் சூப்பர் டேங்கர் கடந்து இருப்பது முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த சூப்பர் டேங்கர்
அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் நடவடிக்கை காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவிற்கு சொந்தமான சர்வ சக்தி(Sarv Shakti) என்ற பிரம்மாண்ட எரிவாயு சூப்பர் டேங்கர் பதற்றமான ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்துள்ளது.
இந்த பயணமானது இந்திய எரிசக்தி துறையின் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

ஈரானின் லாரக் மற்றும் கேஷ்ம் தீவுகளை சுமார் 45,000 டன் சமையல் எரிவாயு அடங்கிய சூப்பர் டேங்கர் கடந்து செல்வது கண்காணிக்கப்பட்டுள்ளது.
ஈரானுடன் தொடர்புடைய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில் இந்த பயணமானது நிகழ்ந்துள்ளது.
மேலும் தற்செயலான தாக்குதல்களை தடுக்க இந்த கப்பல் இந்தியாவுக்கு சொந்தமானது என்றும், இந்திய மாலுமிகள் இதில் பணிபுரிவதாகவும் வெளிப்படையாக அறிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |