97 நாடுகளுக்கு e-Visa on Arrival திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஆசிய நாடு
ஆசிய நாடான இந்தோனேசியா 97 நாடுகளுக்கு e-Visa on Arrival திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தோனேசியா தனது புதிய e-Visa on Arrival (e-VoA) திட்டத்தால் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு பயண அனுபவத்தை எளிதாக்கியுள்ளது.
இப்போது, இந்தியா உள்ளிட்ட 97 நாடுகளில் இருந்து பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.
இதன் மூலம் பாலி (Bali) மற்றும் பிற சுற்றுலா தலங்களைக் காண பயணிகள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
பயணத்தை எளிதாக்கும் e-VoA திட்டம்
இந்தோனேஷியாவின் e-VoA திட்டம் பயணிகளுக்கு முழுமையாக ஓன்லைனில் விசா விண்ணப்பத்தை முடிக்க வாய்ப்பளிக்கிறது.
இதற்கான கட்டணத்தையும் ஓன்லைனில் செலுத்தி, பயணத்திற்கு முன் விசாவை பெறலாம்.
இந்த நடவடிக்கையால் 2025-ல் 14 மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவேற்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய தகவல்கள்
கட்டண விவரங்கள்
- இயல்பான e-VoA கட்டணம்: 500,000 IDR
- VFS Global சேவை கட்டணம்: 230,000 IDR
தேவையான ஆவணங்கள்
1. கடவுச்சீட்டு: வருகை திகதியிலிருந்து குறைந்தது ஆறு மாதங்கள் வரை செல்லுபடியாக இருக்க வேண்டும்.
2. புகைப்படம்: சமீபத்திய புகைப்படம்.
3. Return அல்லது Onward Ticket: பயணத்தை நிரூபிக்கும் ஆதாரம்.
விசா விண்ணப்பிக்கும் நடைமுறை
1. தகவல்களை அளிக்கவும்: VFS Global தளத்தில் தனிப்பட்ட தகவல்களை உள்ளிடவும்.
2. கட்டணத்தை செலுத்தவும்: ஓன்லைனில் பாதுகாப்பாக கட்டணத்தை செலுத்தவும்.
3. விசாவைப் பெறவும்: e-VoA-வை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும்.
யார் விண்ணப்பிக்கலாம்?
இந்த திட்டம் 97 நாடுகளின் குடிமக்களுக்கு திறந்துள்ளது. இதில் இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் அடங்கும்.
இந்த e-VoA திட்டம், இந்தோனேசியாவிற்கு சுற்றுலா பயணிகளை எளிமையாக வரவேற்கும் வகையில் சிறந்த முயற்சியாக அமைகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Indonesia introduces e-Visa on Arrival for 97 countries, Indonesia e-Visa on Arrival, Indonesia e-VoA, Bali, Tourism